Home மாநிலங்கள் தமிழ்நாடு புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல... சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

- Advertisement -

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து, முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

- Advertisement -

புதுச்சேரியில் கொரோனாவின் பாதிப்புகள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு தினமும் 10 நபர்களுக்கு கீழ் இருந்தது. இது மக்களிடம் பெரும் நிம்மதியை தந்தது மெல்ல அவரவர் தொழில்களை செய்ய ஆரம்பித்தனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நமது அண்டை மாநிலங்களிலும் அனைத்தும் தடைசெய்யப்பட்டது அப்போதே புதுவையிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். குறைந்தபட்சம் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களையாவது தடை செய்ய கூறியிருந்தேன்.

ஆனால் அரசு அதை செய்ய தவறிவிட்டது. உயர்நீதிமன்றம் சில வழிகாட்டுதலை கொடுத்து கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மீறப்பட்டன. 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவுபடி உயர்நீதிமன்றம் அனுமதித்தது. வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் இங்கே கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்களையும் எத்தனை பேரை இங்குள்ளவர்கள் 2 தவனை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்று பரிசோதனை செய்து அனுமதித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.
வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களும் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக கூடினார்கள்.

இதன் பலனாக தற்சமயம் அவற்றின் பாதிப்பு ஒரு நாளைக்கு 60 க்கு மேல் அதாவது 600% சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் பலர் பரிசோதனைக்கு வராமல் சாதாரண காய்ச்சல் என்று தாங்களே மருத்துவம் பார்த்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் பொது வெளியிலும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றி வருகின்றனர். இவர்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது.

ஒன்றிய அரசின் உள்துறை கடித எண்: 43-3- 2020/DM-1(A)) தேதி: 27.12.2021 வாயிலாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டது

அதில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு -144 கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது.

ஒன்றிய அரசின் உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி யூனியன் பிரதேச ஆட்சிப் பரப்பு ஒன்றிய அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டும் அதை மதிக்காமல் கொண்டாட்டங்களுக்கு அனுமதித்தது நினைவிற் கொள்ள வேண்டும்.

உலக அளவிலும் இந்திய அளவிலும் கொராணாவில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. இதனால் வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழக முதலமைச்சர். ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை விதித்தார்.

மேலும் பண்டிகை காலங்கள் வருவதால் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற உயரிய நோக்கத்தில் வாரநாட்களில் தினசரி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை 9.1.2022 அன்று முழு ஊரடங்கையும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளார் வருவாயை புறந்தள்ளி மக்களின் நலனே முக்கியம் என்று முடிவெடுத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இந்த முடிவு அவர் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடிமகன்கள் மீது கொண்டுள்ள பற்றையும் அவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் வெளிப்படுத்துகிறது.

ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதால் சனிக்கிழமை மாலையே புதுவையை நோக்கி வந்து விடுவார்கள் இங்கு எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுற்றி திங்கள் கிழமை மீண்டும் தங்கள் ஊர்களுக்கு சென்று விடுவார்கள். இதனால் புதுச்சேரியில் மேலும் நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பு ஏற்படும்.

புதுச்சேரி அரசு வருவாய் வேண்டும் என்ற ஒரே பல்லவியை திரும்பத் திரும்ப பாடாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டும். தற்போது 50 சதவிகித அனுமதி என்ற பெயரளவில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது புதுச்சேரி அரசு.
ஆனால் இதை கண்காணிக்கவும் அமல்படுத்தவும் அக்கறை காட்டாமல் இருப்பது யாரை சமாதானப்படுத்த இந்த கட்டுப்பாடுகள் விதித்தனர் என்பது தெரியவில்லை. உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மேற்கொண்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....