Home மாநிலங்கள் தமிழ்நாடு 1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

- Advertisement -

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் புதுச்சேரி காவல் துறையில் பணிபுரியும் இரண்டு தலைமை காவலர்களுக்கு உதவி ஆய்வாளராகவும், ஏழு தலைமை காவலர்களுக்கு துணை உதவி ஆய்வாளர்களாகவும் மற்றும் 38 காவலர்களுக்கு தலைமைக் காவலராகப் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு சமீபத்தில் அளிக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் 35 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் 30 தலைமை காவலர்கள் மற்றும் சிறப்பு நிலை துணை உதவி ஆய்வாளர்களுக்கு சிறப்பு நிலை உதவி ஆய் வாளராகவும், 25 ஆண்டுகள் பணிபுரிந்த 43 தலைமைக்கு சிறப்புநிலை துணை உதவி ஆய்வாளராகவும், 15 ஆண்டுகள் பணி புரிந்த காவலருக்கு சிறப்பு நிலை தலைமை காவலராகவும் ஆக மொத்தம் 121 நபர்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் பதவி உயர்வுக்கான ஆணையை வழங்கினார். காவல் துறையின் கூடுதல் இயக்குனர் ஆனந்த் மோகன், ஐபிஎஸ் பிரதிக்‌ஷா கோதாரா, ராகுல் அல்வால், லோகேஷ்வரன் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் பதவி உயர்வு பெற்று வாழ்த்தி பதவி ஆணை வழங்கப்பட்டது

- Advertisement -

தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘ஆபரேஷன் விடியல்’ என்ற திட்டத்தின் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டு 88 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் 133 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதற்காக ‘ஆபரேஷன் திரிசூல்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு தொடர் குற்றத்தில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாடகை கட்டிடத்தில் இயங்கும் லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் காவல் நிலையங்களுக்கு இந்த ஆண்டுக்குள் சொந்த கட்டிடம் கட்ட அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும்.

காவலர் நலனில் அக்கறை கொண்டு நீண்ட காலமாக கொடுக்கப்படாமல் இருந்த சீருடைப்படியை வழங்கியுள்ளோம். ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கான சீருடைப்படி நிலுவையில் உள்ளதாக ஏ.டி.பி.ஜி. கூறியுள்ளார். முதல்-அமைச்சருடன் கலந்து பேசி அவற்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகிற 20-ந் தேதிக்குள் 390 காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் காவலர்கள் தேவைப்படும் இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். 2-ம் கட்டமாக 300 காவலர், 400 ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் உள்பட இந்த ஆண்டிலேயே 1000 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

47 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடியாக தேர்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். நிலுவையில் உள்ள காவலர்களுக்கான பல்வேறு நிலுவைத் தொகை அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அரசின் கடமையாக உள்ளது. இதற்காக மேம்பாலம், சாலை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொக்குபார்க் முதல் இந்திராகாந்தி சிலை வரை ரூ.400 கோடியில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் காவலர் பற்றாக்குறை உள்ளது. புதிதாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டதும் தேவைப்படும் இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....