Home மாநிலங்கள் புதுச்சேரி மிகப்பெரிய போராட்டம் - இளைஞர் விழாவை எதிர்த்து...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

- Advertisement -

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

- Advertisement -

இந்திய அரசியலமைப்பின்பால் மாறாத பற்றுகொண்ட நான் தங்களுக்கு தெரிவிப்பது என்னவெனில் புதுச்சேரியில் வருகின்ற 2022 ஜனவரி 12 முதல் 16ம் தேதி வரையிலான 5 நாட்கள் தேசிய இளைஞர்கள் விழா நடைபெறவிருப்பதாக புதுச்சேரி அரசின் மேதகு துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) அவர்கள் அறிவித்திருக்கிறார்.

இந்திய அரசு ஜனவரி 12ம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர்கள் விழாவாக கொண்டாடி வருகிறது. இருந்த போதிலும் இந்தியாவில் கொரனா பெரும் தொற்று மிகப்பெரிய கோரத் தாண்டவத்தை தொடங்கி நடத்தி வருகிறது. சமீகாலத்தில் ஓமைக்ரான் என்னும் வைரஸ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மிகப்பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இத்தகையச் சூழலில் இந்தியப் பெரு நாட்டில் கொரனா (ஓமைக்ரான்) பெருந்தொற்று ஒவ்வொரு நாளும் இரட்டை மடங்காக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழாவினை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைப்பதாகவும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், இளைஞர்கள் 7500 பேர் கலந்து கொள்வதாகவும் அரசு அறிவித்திருக்கிறது. இருந்த போதிலும் இந்நிகழ்சியில் புதுச்சேரி அரசின் ஊழியர்கள் பெறுநிறுவனங்களின் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், காவலர்கள் என 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாக அறியவருகிறது.

இந்நிலை மிகவும் மோசமானதாக அமையும் என புதுச்சேரி மக்கள் அச்சம் கொள்கின்றனர். கடந்த காலங்களில் வடநாட்டில் கும்பமேளாவிற்கு அதிகப்படியான மக்கள் கூடியது மிகப்பெரும் கொரனா பரவுதலுக்கு காரணமாக அமைந்தது. அதே போன்று கடந்த புத்தாண்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமாணவர்களை புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி அரசு அனுமதி அளித்திருந்தது.

அதன் விளைவாக புதுச்சேரியில் ஒமைக்ரான் நோய்த்தொற்று அதிகரித்து இருக்கின்ற சூழலில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் இந்த இளைஞர் விழா மூலம் மிகப்பெரும் அளவில் நோய்தொற்று ஏற்படும் என்கிற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. கொரனா பெருந்தொற்றை காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நேரடிவழக்கு விசாரளையை தடைசெய்திருப்பது அனைவரும் அறிந்தது.

மேலும் நோய்த்தொற்றானது பரவுதல்மூலம் இந்த சிறிய யூனியன் பிரதேசத்தில் பெரும்அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே புதுச்சேரி அரசும், இந்திய ஒன்றிய அரசும் இந்த இளைஞர் விழா நடைபெறுவதனை தடைசெய்ய வேண்டும். இந்த அரசு புதுச்சேரி மக்களின் உயிரோடு விளையாடுவதனைக் கைவிட வேண்டும் என்றுதமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு அரசாங்கம் பொதுமக்களின் மீது அக்கரை செலுத்தாமல் இருக்குமாயின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூலமாக சமூக இயக்கங்கள் மற்றும் புதுச்சேரியின் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....