Home மாநிலங்கள் புதுச்சேரி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் - மக்கள் நலத் திட்டங்களுக்கு... Ex MLA நந்தா சரவணன் வேண்டுகோள்

அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் – மக்கள் நலத் திட்டங்களுக்கு… Ex MLA நந்தா சரவணன் வேண்டுகோள்

- Advertisement -

புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிகாரிகள் மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

- Advertisement -

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நிர்வாக தேக்கம் ஏற்பட்டு அதனை சரி செய்வதற்கு புதுச்சேரி மாநில முதல்வர் பல்வேறு விரைவு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் விதவை ஆகியோர்களுக்கு பென்ஷன் வழங்கியது.
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பஞ்சப்படி உயர்வு, கல்வி உதவித்தொகை உயர்வு, முதியோர் விதவை பென்ஷன் தாரர்களுக்கு ரூபாய் 500 மாதம்தோறும் உயர்வு, அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்கியது போன்ற எண்ணற்ற பணிகளை ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் செய்து முடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே பெட்ரோல் டீசல் விலையை குறைத்து ஒரு முன்மாதிரி மாநிலமாக -மக்களின் அரசாக- இந்த அரசினை வழிநடத்தி வருகிறார்.

மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளை சட்டப்பேரவையில் அறிவித்து அதற்கு செயல்வடிவம் கொடுக்க பாடுபட்டு வருகிறார்.அதற்கு அரசின் உயரதிகாரிகள் மிகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் தவிர மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயங்களையும் திருப்பி அனுப்புவது மக்களுக்கு அதிகாரிகள் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். இம்மாதிரியான அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

மக்களுக்கு அரசு அறிவிக்கின்ற திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றால்அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்து கொள்ளலாம். இந்த அரசின் வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் இந்த மாநிலத்தில் நீங்கள் பதவி வகிப்பது எதற்காக?மாநில அரசின் உயர் அதிகாரிகள் எண்ணிக்கையில் அதிகபட்சமாக இருந்தும் மாநிலத்தின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஒரு அரசினுடைய தோல்வியாக அது கருதப்படும்.

ஏதோ புதிதாக அமைந்த அரசுக்குத்தான் அந்தப் பெயர் ஏற்படும் என்று அதிகாரிகள் நினைத்தால் அது மிகவும் தவறான எண்ணமாகும். கடந்த கால ஆட்சியில் இருந்த மாதிரியே தற்போதும் செயல்படுவோம் என்றால் அரசு அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.

நிர்வாகத் தேக்கங்களை சரி செய்வதற்கு மாநில முதல்வர் முயற்சி எடுக்கும்போது அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருந்தால் அரசு எந்திரம் நன்றாக பயணிக்காது. அனைவருக்கும் ரூபாய் ஐந்தாயிரம் மழை நிவாரணம், கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய பெருங்குடி மக்களுக்கு நிவாரண உதவித்தொகை, ஐந்து வருடங்களாக நிரப்பப்படாத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர் பணியிடங்கள், பொதுவிநியோக கடையின் மூலம் மாநில குடும்பங்களுக்கு குடிமை பொருள் வழங்கல், கூட்டுறவு நிறுவனங்கள் புணரமைப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலை மறு உருவாக்கம் செய்தல், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவச கல்வி அளித்தல், ஐந்து வருடங்களாக நின்றுபோன மாநில வளர்ச்சித் திட்டங்க ளை செம்மைப்படுத்த செயலாக்கம் செய்தல்உள்ளிட்ட ஏராளமான பணிகள் நம்முன் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது முத்தியால்பேட்டை தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தேன். அதுவும் இன்னும் கிடப்பில் தான் உள்ளது. இவற்றையெல்லாம் செயல்படுவதற்கு உயரதிகாரிகள் முனைப்புடன் பணியாற்றினால் தான் மாநிலம் முன்னேற முடியும்.
மேற்கண்ட திட்டங்களை வலியுறுத்ததான் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலக முதன்மை அதிகாரியை சந்தித்து முறையிட்டனர். இது அவருக்கு மட்டும் உரித்தானது அல்ல.

அனைத்து நிலை அதிகார மட்டத்தில் உள்ள அனைவருக்கும் பொருத்தமானது. இதனை தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் புறக்கணிக்க நேர்ந்தால் மாநில மக்களும் மாநில அரசும் கடந்த கால ஆட்சியை போல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்.

புதுச்சேரி மாநில முதல்வர் விரைந்து பணியாற்றுகின்ற வேளையில் அரசு எந்திரமும் முதல்வர் அவர்களுடன் பயணித்தால் தான் மாநில வளர்ச்சியினை கொண்டு சொல்ல முடியும். மாநில அரசு ஆனாலும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் மாநில முன்னேற்றத்திற்கு தான் பாடுபடுகிறார்கள் என்பதை நினைவில் கொண்டு வருங்காலத்தில் அரசு உயரதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேண்டுகோள் வைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....