Home மாநிலங்கள் தமிழ்நாடு டிசம்பர் 17ம் முதல் - 25வது தேசிய புத்தக் கண்காட்சி புதுவையில் ...

டிசம்பர் 17ம் முதல் – 25வது தேசிய புத்தக் கண்காட்சி புதுவையில் …

- Advertisement -

புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கத் தலைவர் முத்து, சிறப்பு தலைவர் பாஞ்.ராமலிங்கம் ஆகியோர்கள் அளித்த பேட்டியில்,

- Advertisement -

கொரனா விழிப்புணர்வு புத்தகக் கண்காட்சி, புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் 2021 டிசம்பர் 17 முதல் 26 வரை 10 நாட்கள் வெள்ளி விழா 25ஆவது தேசியப் புத்தகக் கண்காட்சியாக நடைபெறவுள்ளது. உங்கள் பேராதரவோடு இம்மண்டபத்தில் எம்மால் நடத்தப்பெறும் 25-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி இறு என்பதைப் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

- Advertisement -

கண்காட்சித் தொடக்க விழா 17.12.2021 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விழாவில், புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கத் தலைவர் முனைவர் முத்து அவர் வரவேற்புரையாற்றவும், புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கச் சிறப்புத் தலைவர் முனைவர் பாஞ். இராமலிங்கம் அவர்கள் நோக்கவுரையாற்றவும், சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் அவர்கள் தலைமையேற்கவும், முதலமைச்சர் ரங்கசாமி அவர்கண்காட்சியைத் திறந்து வைத்துப் வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி நூலினை வெளியடவும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் ‘புத்தக சேவாரத்னா விருதுகள் வழங்கி சிறப்பிக்கவும் உள்ளார்கள்.

பொதுபணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனன், வேளான அமைச்சர் ஜெயக்குமார், போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், துணைச் சட்டப்பேரவைத் தலைவர் ராஜவேலு ஆகியோர்கள் நூல் வெளியீட்டு சிறப்பு விருந்தினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் வாழ்த்துரை வழங்கவும், சென்னை, சோவியத் ரஷ்யா தூதரசு உயர் அதிகாரி, நடராஜன் அவர்கள் பாராட்டுரை வழங்கவும், புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கச் செயலர் கோதண்டபாணி அவர்கள் நன்றியுரை வழங்கவும் உள்ளார்கள்.

கண்காட்சி தொடக்க விழாவில் 25 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடபட உள்ளது. இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான இந்திய பகுதிகளிலிருந்து சுமார் 70 புத்தக வெளியீப்டாளர்கள் மற்றும் விற்பணையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும்.வைக்கப்பட உள்ளன.

கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்கு தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழாங்கப்படுகிறது. முற்பகல் 11.00 மணி முதல் இவு 8.00 மணி வளர கண்காட்சி நடைபெறும்.

கொரோனா 19 பெருந்தொற்றை முன்னிட்டு மத்திய அரசும் மாநில அரசும் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் இவ்வாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சிக்கு வரும் அனைத்துப் பார்வையாளர்களும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் கண்காட்சி வளாகத்தில் சேனட்டைசர் பயன்படுத்தி கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்காட்சி அரங்குகளில் ஈமூக இடைவெளியுடன் புத்தகங்களைப் பார்வையிட வேண்டும்; பார்வையாளர்களின் வசதிக்கு ஏற்ப்புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற புத்தக நிறுவனங்களின் ஒத்துழைப்பும் வாசகர்களின் ஒத்துழைப்பும் அவசியமானதாகும் என்று கூறினார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....