Home மாநிலங்கள் புதுச்சேரி புதிய கட்டுப்பாடுகள் - ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க

புதிய கட்டுப்பாடுகள் – ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க

- Advertisement -

புதுவையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து ஒமிக்ரான் என்ற வைரசாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இது 14 நாடுகளில் பரவி ஒட்டுமொத்த உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை

- Advertisement -

தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ்பூஷன் அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச அரசுகளுடன் காணொளி காட்சியில் பேசியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே வெளியே அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் சோதனை முடிவுகள் வெளிவரும் வரை பயணிகள் தங்கியிருக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனிடையே ஆப்பரிக்கா நாட்டை சேர்ந்த 3 பேர் புதுவைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

புதுவை சுகாதாரத்துறையினர் அவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தினர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கவர்னர் தமிழிசை ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், மாநில எல்லைகளில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நகர பகுதியிலும் வெளி மாநிலத்தினர் நடமாடும்போது அவர்கள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு கிடக்கிறது. தற்போது மழை குறைந்துள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலமும் நெருங்குகிறது. இதனால் புதுவைக்கு இம்மாதம் கூடுதலாக சுற்றுலா பயணிகள் வரலாம்
என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மூலம் புதுவையில் புதிய வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனால் மாநில எல்லைகளில் சுற்றுலா பயணிகளுக்கு எவ்விதம் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்? என்பது குறித்து அரசு தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....