Home மற்றவை மருத்துவம் மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெந்தயம்

மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெந்தயம்

- Advertisement -

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நீர் சத்து, புரதச் சத்து போன்றவை வெந்தயத்தில் அடங்கியுள்ளது. இது தவிர சுண்ணாம்புச்சத்து, சோடியம் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாது பொருட்களும், ரிபோபிளேவின், தயா மின், வைட்டமின் ஏ, போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன.

- Advertisement -

தாய்ப்பால் சுரக்க வெந்தயத்தில் உள்ள டையோஸ்ஜெனின் என்ற வேதிப்பொருள் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தை சிறிதளவு சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் பால் அதிகமாக சுரக்கும்.

- Advertisement -

பெண்களின் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் சில உபாதைகள் ஏற்படும். இந்த உபாதைகளை குறைக்க வெந்தயம் உதவியாக உள்ளது. முதன்முதலில் மாதவிடாய் ஏற்படும் சமயத்திலும், கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு உடம்பில் ஏற்படும் சூட்டை தணிக்கவும், மனநிலை மாற்றத்தை சரி செய்யவும் வெந்தயத்தை சிறிதளவு வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.

இதய அடைப்பை தவிர்க்க வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் சத்தினால் நம் இதயத்துடிப்பும், ரத்தக் கொதிப்பும் சீராக இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்தானது இதய அடைப்பை வரவிடாமல் தடுக்கிறது. வெந்தயத்தை சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை, இவைகள் அனைத்தையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு நீருடன் தேன் கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை நீங்கும். கொலஸ்ட்ராலை குறைக்க நம் உடலில் உள்ள கொழுப்புப் புரதத்தை இது குறைப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் உடலின் எடையை குறைக்கலாம்.

சக்கரை நோய் கட்டுப்படுத்த வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அமினோ அமில சத்து வெந்தயத்தில் இருப்பதால், இன்சுலின் சுரப்பியை நம் உடலில் சீராக வைக்கிறது.

இரவு நேரங்களில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, விடிந்ததும் தண்ணீருடன் சேர்ந்த வெந்தயத்தை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சர்க்கரை அளவு குறையும். செரிமானத்தைத் தூண்டும் சில சமயங்களில் நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை நீக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இது நம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
வயிற்று கடுப்பு சூட்டினால் சில சமயங்களில் திடீரென்று ஏற்படும் வயிற்று வலியாக இருந்தாலும், வெந்தயத்தை வறுத்து நீர் விட்டு காய்ச்சி, சிறிதளவு தேன் கலந்து அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது வெந்தயத்தை பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். இப்படி செய்தால் வயிற்று கடுப்பு குணமாகும்.

அன்புடன்

மரபுவழி சித்த மருத்துவர் சிவபெருமாள் சுகன்யா சித்த வைத்தியசாலை

மடப்பட்டு. செல்: 97 86 86 58 99


உங்கள் சந்தேகங்களுக்கு மற்றும் ஆலோசனைகளுக்கு என்னை அழைக்கவும்

நன்றி வணக்கம்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....