Home மாநிலங்கள் இந்தியா ஒலிம்பிக் தடகளத்தில் பெரும் சாதனை - சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறை..

ஒலிம்பிக் தடகளத்தில் பெரும் சாதனை – சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறை..

- Advertisement -

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக, ஒலிம்பிக் தடகளம் போட்டியில் தங்கம் வென்றுள்ளது இந்தியா. இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இது ஒரு சரித்திர சாதனை என்று விளையாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

ஹரியானா மாநிலத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார் .

- Advertisement -

டோக்கியோவின் சீதோஷன நிலைக்கு ஏற்ப ஈட்டி எறிவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு தங்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. முதல் மூன்று சுற்றுகளில் அதிகபட்சமாக 87.58 மீ. தூரம் வீசி நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தினார். ஆரம்பத்திலேயே அவர் தனது முழு திறனையும் வெளிப்படுத்தியதுதான் வெற்றிக்கு வழி வகுத்தது. 4வது மற்றும் 5வது சுற்றுகளில் வீசியபோது நீரஜ் சோப்ரா கோட்டைத் தாண்டியதால் பவுல் என அறிவிக்கப்பட்டு அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 5வது சுற்றின் முடிவிலும் நீரஜ் சோப்ரா தான் முன்னிலை வகித்தார். இறுதியில் பிற வீரர்களை விட அதிக தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா.

சுதந்திர இந்தியா முதன் முறையாக ஒலிம்பிக்கில் தடகளம் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறது. அதுவும் இதுவரை நமது நாடு பெரிதும் சோபிக்காத தடகளம் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. கடந்த 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் கடைசியாக இந்தியா பதக்கம் வென்றிருந்தது. நார்மன் பிட்சர்ட் 200 மீ. ஓட்டம் மற்றும் 200 மீ. தடை ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

அதன்பிறகு தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுதான். பொதுவாக ஹாக்கி, டென்னிஸ், பேட்மின்டன், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் இது மட்டும்தான் இந்திய வீரர்கள் சோபிப்பது வழக்கம்.

அதுமட்டுமின்றி பெரிய அளவுக்கு ஸ்பான்சர்கள் அல்லது கவனம் கிடைக்காத ஒரு தடகள போட்டி ஈட்டி எறிதல். அதில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார் என்பதால் இனிமேல் தமிழ்நாடு உட்பட நாடு முழுக்க மைதானங்களில் மீண்டும் வீரர்களால் ஈட்டி கையில் எடுக்கப்படும், எறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தமிழக தடகள சங்க செயலாளர் ஒருவர் கூறும்போது,

இதுவரை கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. மேல் மேலும் ஒலிம்பிக்கில் சாதிக்க இந்த வெற்றிதான் பிள்ளையார் சுழியாக எடுக்கப்படும். சர்வதேச அளவில் நம்மாலும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்துள்ளோம். வரும் தலைமைக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளோம். நமது மக்கள் தொகையை ஒப்பிட்டால் விளையாட்டில் பங்கேற்போர் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. எனவேதான் அதிகம் பதக்கம் வெல்ல முடியவில்லை. கடந்த ஒலிம்பிக்கில் பெண் வட்டு எறிதலில் 8வது இடம் பிடித்தோம். தொடர்ந்து எறிதல் போன்ற விளையாட்டுகளில் நமக்கு சாதகம் உள்ளது. இதில் கவனம் செலுத்தி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டால் கூடுதலாக பதக்கங்களை வெல்லலாம் என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலம் முன்புவரை கூற, கிராமப்புற பள்ளிகளில் ஈட்டி எறிதல் விளையாட்டு வகுப்புகளில் ஒரு அங்கமாக இருந்தது. வரவர விளையாட்டு வகுப்புகளும் இல்லை, அதிலும் குறிப்பாக ஈட்டி எறிதல் இல்லை. கிரிக்கெட், கால்பந்து, கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுக்களோடு நமது பள்ளிகளில் விளையாட்டுகளை முடித்துக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த வெற்றி மிகப்பெரிய திருப்புமுனையை இந்திய விளையாட்டு வரலாற்றில் ஏற்படுத்தப் போகிறது. வருங்காலத்துக்கு உரம் அளிக்க போகிறது என்ற நம்பிக்கை விளையாட்டு வீரர்கள், குறிப்பாக, தடகள விளையாட்டு வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனிடையே நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்திய முதல் குடிமகன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடமிருந்து முதல் வந்தது. தங்கம் வென்றதன் மூலமாக இந்தியா பதக்கப் பட்டியலில் வேகமாக முன்னேறி 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நீரஜ் சோப்ரா கடந்த 3 மாதங்களாக ஸ்வீடன் நாட்டுக்குச் சென்று பயிற்சி பெற்றார். ராணுவத்தில் ஹவில்தார் பதவியிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....