Home மாநிலங்கள் இந்தியா கொரோனா மூன்றாவது அலை பரவலா…? பீதியில் புதுச்சேரி மக்கள்.. - அடுத்தடுத்து 21 குழந்தைகளுக்கு கொரோனா...

கொரோனா மூன்றாவது அலை பரவலா…? பீதியில் புதுச்சேரி மக்கள்.. – அடுத்தடுத்து 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று…

- Advertisement -

புதுச்சேரியில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக 1 வயது முதல் 5 வயது வரை உள்ள 16 குழந்தைகளுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு அது மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கி உள்ள நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பது புதுச்சேரி மாநில மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது, புதுச்சேரியில் குழந்தைகள் அதிக அளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 16 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது கொரோனா தொற்று மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதுவையில் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று அதிக அளவில் ஏற்பட்டிருப்பது, கொரோனா மூன்றாவது அலை துவங்கி விட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வழக்கத்திற்கு மாறாக குழந்தைகளுக்கான கொரோனா நோய்த்தொற்று அதிகமாகி வருவதால் புதுச்சேரி மாநில மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ள 6 வயதுக்கும் உட்பட்ட 16 குழந்தைகள் அனைவரும் புதுச்சேரி கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார்,
“புதுச்சேரியில் இதுவரை 21 குழந்தைகளுக்கு ஒரு நாள் தொற்று அறிகுறிகள் இருக்கின்றது அதிலும் 1 வயது முதல் 5 வயது வரை உள்ள 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மீதமுள்ள 5 பிறந்த குழந்தைகளில் தாய்களுக்கு கொரோனா தொற்று உள்ளதால், இந்த குழந்தைகளுக்கான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் தொற்று வராது. குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் என்பதை ஆஷா ஒர்க்கர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் புதுச்சேரியில் 5 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....