Home மாநிலங்கள் தமிழ்நாடு புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

- Advertisement -

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.
அதேபோன்ற நிலைமை 2021ம் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.

2021ம் நடைபெற்ற புதுவை மாநிலத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜனதாவுக்கு 9 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 5 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தொகுதியில் அன்பழகன், முதலியார் பேட்டையில் பாஸ்கர், முத்தியால்பேட்டையில் வையாபுரி மணிகண்டன், காரைக்கால் தெற்கு அசனா, உருளையன்பேட்டை தொகுதியில் ஓம்சக்தி சேகர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் உப்பளம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அனிபால் கென்னடி 13,227 வாக்குகள் பெற்றார். அன்பழகன் 8,501 வாக்குகள் பெற்று 4,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

- Advertisement -

முதலியார்பேட்டை தொகுதி யில் தி.மு.க. வேட்பாளர் சம்பத் 14,785 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஸ்கர் 10,747 வாக்குகள் பெற்று 4,038 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதே போல் முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் பிரகாஷ்குமார் 8,655 வாக்குகள் பெற்றார். வையாபுரி மணிகண்டன் 7,658 வாக்கு பெற்று 997 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இதேபோல் உருளையன் பேட்டை தொகுதியில் போட்டியிட்ட ஓம்சக்தி சேகர் கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓம்சக்தி சேகர் தோல்வியடைந்தார். தற்போது நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட தேர்தல் பணிகளை செய்து வந்தார். இந்தநிலையில் நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அவருக்கு உருளையன்பேட்டை தொகுதி போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே, அவர் வேறு வழியின்றி தேர்தலில் போட்டியிட்டார்.

இந்தநிலையில் அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரான நேரு 9,151 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் கோபால் 7,178 வாக்குகள் பெற்று 2&வது இடத்திலும், 1,681 வாக்குகள் பெற்று 3&ம் இடத்திற்கு ஓம்சக்தி சேகர் தள்ளப்பட்டார்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நாஜீம் 17,042 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அசனா 5,271 வாக்குகள் பெற்று 11,771 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் புதுவை மாநிலத்தில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாததால் கூடாரம் காலியாகி உள்ளது. .

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....