Home மாநிலங்கள் தமிழ்நாடு உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக....

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

- Advertisement -

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில் பாகூரில் முதல் முறையாக உதயசூரியன் சின்னத்தில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த வெற்றி வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. நான்கு பேர் பிரச்சாரம் செய்தும் இந்த வெற்றியை செந்தில்குமார் பெற்று இருக்கிறார்.

இத்தொகுதியில் போட்டியிட்ட தனவேலு ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தவர், காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட அவர் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவருடைய அரசியல் அணுகுமுறை வித்தியாசமானது. அதை செந்தில்குமார் முறியடித்துள்ளார். முன்னாள் அமைச்சர் தியாகராஜன் தனக்கு டிக்கெட் கிடைக்காவிட்டாலும், தனவேலுவை வெற்றிபெறச்செய்யுமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். தியாகராஜன் முயற்சியும் செந்தில்குமாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் வேல்முருகன் கடைசி நேரத்தில் தனவேலுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதையும் செந்தில் குமார் முறியடித்துள்ளார்.

எல்லாவற்றிக்கும் மேலாக முன்னாள் முதல்வர் ரங்கசாமி 2 முறை தனவேலுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதையும் தாண்டி செந்தில் குமார் வெற்றி பெற்றுள்ளார். இப்படி நான்கு பேர் செய்த பிரச்சாரத்தையும் தாண்டி செந்தில்குமார் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி விட்டுக் கொடுத்து, கூட்டணி கட்சிகளும் பலமுறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தனவேலு வெற்றி பெற்றார் என்று குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....