Home மாநிலங்கள் தமிழ்நாடு பொம்மலாட்டம் - தன்னம்பிக்கை கலைக்குழு சார்பில்...

பொம்மலாட்டம் – தன்னம்பிக்கை கலைக்குழு சார்பில்…

- Advertisement -

புதுச்சேரியில் தன்னம்பிக்கை கலைக்குழு மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த தன்னம்பிக்கை கலைக்குழு, மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக கொண்டு பல மாவட்டங்களில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல விருதுகளை பெற்று வெற்றிகரமாக பயணித்து வருகிறது.

இந்த தன்னம்பிக்கை கலைக்குழு உள்ளவர்களின கடின உழைப்பிற்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக, தன்னம்பிக்கை கலைக்குழு மற்றும் ஸ்டுட்கார்ட் தமிழ் சங்கம்.இ.வி. இணைந்து புதுச்சேரி, முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆன்லைன் சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி மிகபிரமாண்டமாக நடைபெற்றது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், தப்பாட்டம் மற்றும் டெடி படத்தில் பொம்மை வேடத்தில் நடித்த நாயகரும், தன்னம்பிக்கை கலைக்குழு உறுப்பினருமான கோகுல் மற்றும் சாவித்திரி பாய் புலே அம்மையார் என சிறப்பு வேடமேற்றவர்களுடன் சிறப்பு நிகழ்வுவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜெர்மனியில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்தது வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரையும் வீரப்பேரரசி வேலு நாச்சியார் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனர் திருமதி. டாக்டர். மணிமேகலை அம்மையார் கலந்து கொண்டு தன்னம்பிக்கை கலைக்குழு சார்பாக இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளை கௌரவித்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னம்பிக்கை கலைக்குழு நிறுவனர் எலிசபெத் ராணி மற்றும் நந்தகோபால் செய்திருந்தனர்

நிகழ்ச்சி முடிவில், தன்னம்பிக்கை கலை குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ள உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தன்னம்பிக்கை கலைக்குழுவினர் நன்றி கூறினார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....