Home மாநிலங்கள் புதுச்சேரி வேட்பாளர்கள் சாலை மறியல் - தட்டாஞ்சாவடி தொகுதியில்...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

- Advertisement -

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழ் கட்சி உட்பட மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்கு பதிவு நாளான ஏப்ரல் 6ம் தேதி வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், காலை சுமார் 10.30 மணி அளவில் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிக்கு அருகில் ஜக்கு சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்களை ரோட்டில் வீசியபடியே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்கள்.

- Advertisement -

இதனைக் கண்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து மற்ற வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதால், காமராஜர் சாலை, தமிழ் அன்னை நகர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேதுசெல்வம், நாம் தமிழர் கட்சி ரமேஷ், மக்கள் நீதி மய்யம் ராஜேந்திரன் மற்றும் பலர் ஒன்று கூடி, தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் செய்தும், சம்பவ இடத்திற்கு தேர்தல் அதிகாரி வராததால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் காமராஜர் சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் செய்தார்கள். அருகில் வாக்குச்சாவடி இருந்ததால் அப்பகுதி முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு மறியலை கைவிடும்படி வலியுறுத்தியும், வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் மறியலை கைவிடவில்லை. இதனால் இரு தரப்புகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் அவர்களை விடாப்பிடியாக இழுத்து அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....