Home மாநிலங்கள் புதுச்சேரி போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் - வைத்தியநாதன பேச்சு..

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

- Advertisement -

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க., புதிய நீதிக்கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் வீடு, வீடாக சென்று அடுக்குமாடி குடியிருப்புகளை எல்லாம் ஏறி கடந்த 15 நாட்களாக வாக்கு சேகரித்தார்.
சென்ற இடமெல்லாம் அமோக வரவேற்பும், ஆதரவும் கிடைக்கப்பெற்ற சூழலில் மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் தெரிவித்தனர். மக்களோடு மக்களாக பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிந்தபோது அவர் கூறியதாவது:

உங்கள் பிரச்சனைகளை அறிந்தவன் நான். செல்லும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக மகாவீர் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த பிரச்சனை, நெசவாளர் நகர் பகுதியில் நெசவாளர்களின் வாழ்வாதார பிரச்சனை, சாந்தி நகர், குறிஞ்சி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் சாலை பிரச்சனை, ஒரு சில இடங்களில் ரவுடிகளின் பிரச்சனை என பல இருக்கிறது. இவைகளை எல்லாம் பதவி ஏற்ற நாள் முதல் படிப்படியாக குறைக்கப்படும்.

- Advertisement -

ஆனால் ஒட்டு மொத்தமாக 6 மாத காலத்துக்குள் தொகுதி முழுவதும் சாலை பணியை முதல் கட்டமாக அமைத்து தருவேன் என என்னால் நிச்சயம் உறுதியாக சொல்ல முடியும். அதேபோல் சுய தொழில் தொடங்க அரசு துறையிடம் இருந்து தகுதி அடிப்படையில் கடன் பெற்று தந்து தொழில் தொடங்க முனைவோரை முதலாளியாக்க என்னால் முடியும், ஊனமுற்றோர் வாழ்வாதாரத்தை உயர்த்த மூன்றுசக்கர வாகனம் மற்றும் அரசு திட்டங்களையும், சிறு, குறு தொழில் செய்வோருக்கு, கடன் உதவி எனவும், கலைஞர்களுக்கு உபகரணம், என எந்த எந்த துறையில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறதோ அந்த அந்த திட்டங்களை தோண்டி எடுத்து மக்கள் பயன்பெற அரசை அணுகி பெற்றுத்தருவேன்.

நான் வாக்கு சேகரிக்க வரும் போது மக்கள் எனக்கு தரும் ஆதரவை பார்க்கும்போது கடந்த 15 ஆண்டுகள் நான் செய்த மக்கள் பணிக்கும் மதச்சார்பற்ற கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவாகவே தான் பார்க்கிறேன். தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்களை அடையாளம் காண துவங்கி விட்டனர். மக்கள் விழிப்புடன் தான் இருக்கின்றனர். இனி போலித்தனமான, வாக்குறுதிகளுக்கு எல்லாம் செவிசாய்க்க மாட்டார்கள்.

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் மக்கள் விரோத கட்சியில் களம் இறங்கியுள்ள சகோதரர் போலியான வாக்குறுதிகளை அள்ள் கொடுத்து கொண்டிருக்கிறார். ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். செய்முடியும் என்றால் வாக்குறுதி கொடுக்கலாம். இலாசுபேட்டையில் இலவச பட்டா கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். இங்கு ஏது இடம், இனியும் மக்கள் ஏமாற தயாராக இல்லை. இலாஸ்பேட்டை தொகுதியில் அனைத்து தரப்பு மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெறுவேன் என பேசினார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....