Home மாநிலங்கள் புதுச்சேரி மக்களோடு மக்களாக இணைந்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு - வைத்தியநாதன் இலாஸ்பேட்டையில்....

மக்களோடு மக்களாக இணைந்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு – வைத்தியநாதன் இலாஸ்பேட்டையில்….

- Advertisement -

புதுவை லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவ்வாறு வாக்கு சேகரிக்கும் போது, மளிகை கடை உள்ளே அமர்ந்து கொண்டு தொழில் பற்றி விவரங்களை கடைக்காரிடம் கேட்டுக் கொண்டே பொது மக்களுக்கு வியாபரம் செய்துக் கொண்டு மக்களோடு மக்களாக இணைந்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

இலாஸ்பேட்டை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலய அறங் காவல் குழுவினர் வேட்பாளர் வைத்தியநாதனுக்கு வரவேற்பு அளித்தார்கள். பின்பு, நேரு நகர், அசோக் நகர் பகுதியில் அவர் வாக்கு சேகரித்தார்.

- Advertisement -

அப்போது வைத்தியநாதன் பேசும்பொழுது,

அசோக் நகர் பூங்கா சரியாக பராமரிக்கப் படாததால் சேத மடைந்து கிடக்கிறது. இப்பகுதி மக்கள் குழந்தை களோடு பொழுது போக்குக்கு பூங்காவை பயன்படுத்த முடியாமல் உள்ளது. அசோக் நகர் பூங்காவை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன்.

பூங்காவை சுற்றியுள்ள சேதமடைந்த சாலைகளை மேம்படுத்து வேன். அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சி புதுவைக்கு வந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும் என்பது தவறானதாகும். எந்த ஆட்சி வந்தாலும் தொகுதி மக்களுக்காக கட்சி பாகுபாடின்றி போராடி, நலத் திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் பெற்றுத் தருவேன் என்று கூறினார்.

ஓட்டு சேகரிக்கும் போது, வேட்பாளருடன் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை, கமலா அறக்கட்டளை நிர்வாகிகள், மகளிர் குழுவினர் உடன் சென்றனர்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....