Home மாநிலங்கள் இந்தியா புதுவைக்கு மாநில அந்தஸ்து, நிதி போதவில்லை - பிரதமருக்கு ரங்கசாமி கோரிக்கை...

புதுவைக்கு மாநில அந்தஸ்து, நிதி போதவில்லை – பிரதமருக்கு ரங்கசாமி கோரிக்கை…

- Advertisement -

புதுச்சேரி ஏஎப்டி திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்பாக, என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:

கடந்த 2011ல் புதிதாக கட்சி தொடங்கி இதே மைதானத்தில் மாநாடு நடத்தி வென்று ஆட்சியமைத்து நினைவுக்கு வருகிறது. அந்த வெற்றி இப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அது இருண்ட ஆட்சி. புதுவையை 15 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்ட ஆட்சியை நாராயணசாமி நடத்தினார்.

- Advertisement -

கடந்த முறை புதுவை வந்த போது நாராயணசாமி மட்டும் தனியாக இருப்பார் என்று பிரதமர் கூறினார். அந்த நிலைமையில்தான் நாராயணசாமி இப்போது இருக்கிறார். தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் நாராயணசாமி இருக்கிறார். ஐந்து ஆண்டு ஆட்சியில் செய்த சாதனை ஏதேனும் ஒன்றை கூட நாராயணசாமியால் சொல்ல முடியாது. தேர்தலின் போது ஆளுங்கட்சியில் இருந்தோர் தான் செய்த திட்டங்களை தேர்தல் சமயத்தில் எடுத்து சொல்வார்கள். ஒரு வாக்குறுதியை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. பழைய திட்டங்களையும் முடக்கியதுதான் நாராயணசாமியின் வேலை.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்றார். இதை கூறும்போதே சிந்தித்துக் கூறி இருக்க வேண்டும். புதுவையில் 3.27 லட்சம் குடும்பங்கள் உள்ளது. எப்படி அனைத்து குடும்பங்களுக்கும் வேலை கொடுக்க முடியும். 10 பேருக்கு கூட இவர்களால் வேலை கொடுக்க முடியவில்லை. இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். ஒருவருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. முதியோர் உதவித்தொகையை ஐந்து ரூபாய் கூட உயர்த்தி தராதது கடந்த அரசு.

புதுவையில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த பகுதியும் வளர்ச்சி அடையவில்லை. அப்படிப் பட்ட நிலையில் தான் கடந்த ஆட்சி நடந்தது. நாராயணசாமி தேர்தலில் நிற்கவில்லை. அவர் கொல்லைப்புறம் வழியாக வருபவர். அவரால் தேர்தலில் நிற்க முடியாது. திட்டங்களை முடக்கிய காங்கிரஸ் மறுபடியும் தேர்தலை சந்திக்க வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி அடிக்கடி மாநில அந்தஸ்து வேண்டும் என்கிறார். நாங்கள் பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

பிரதமரை சந்தித்த போதும் கூட கேட்டுள்ளேன். அத்துடன் எங்களுக்கு நிதி போதாது. கொடையை உயர்த்தி கொடுங்கள். அப்போதுதான் புதுச்சேரி வளர்ச்சி பெற முடியும் என்று முதலில் சந்தித்தபோது பிரதமரிடம் கேட்டிருந்தேன்.

இப்போது மத்திய அரசின் கொடையை உயர்த்தி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதுச்சேரியில் விற்பனை வருவாயை தவிர வேறு வருவாய் கிடையாது. எனவே, மத்திய அரசு கவனத்தில் வைத்து கொண்டு கொடையை உயர்த்தி தர வேண்டும்” என்று பிரதமரை பார்த்து குறிப்பிட்டார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....