Home மாநிலங்கள் புதுச்சேரி முப்பெரும் விழா - காட்டேரிக்குப்பத்தில்

முப்பெரும் விழா – காட்டேரிக்குப்பத்தில்

- Advertisement -

ஆர்யபட்டா அறிவியல் மன்றம் சார்பில் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் ஆர்யபட்டா அறிவியல் மன்ற இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில் இளையோர் மன்ற துவக்க விழா, தண்ணீர் தினம் மற்றும் சர்வதேச வன தினம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் உலகம் நற்பணி மன்ற செயலர் அஜித்குமார் வரவேற்புரை ஆற்றினார். இரு மன்ற செயல்பாடுகளையும் துவக்கி வைத்து நிண்கலை ஆசிரியர் மதிவாணன் சிறப்புரை ஆற்றினார்.

கிராமங்களின் இயற்கை வளங்கள் மற்றும் கற்றல் புதுவை மாநில அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்களுக்கான வாய்ப்புகளும், அறிவியல் செயல்பாடுகளும், தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் வனங்களின் அவசியம் ஆகியன பற்றி விளக்கினார்.

- Advertisement -

பல்வேறு சுற்றுச்சூழல் செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உடல் ஆரோக்கியம், சுய ஒழுக்கம், நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் சுற்றுச்சூழல் பாதுகாத்தல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக நடைபெற அவசியம் குறித்து வலியுறுத்தினார். காச அறக்கட்டளை பொறுப்பாளர் மரக்கன்றுகள் வழங்கி மரங்களின் முக்கியத்துவம் மாணவர்களிடம் பகிர்ந்தார்.

தொடர்ந்து மரக்கன்றுகள் சாலையோரம் நடப்பட்டு வேலி அமைக்கப்பட்டு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிவாகை சூடிய மாணவர்கள் நிக்ழ்ச்சியில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சி புதுமையாகவும் மன்ற செயல்பாடுகளிலும் தனிமனித வாய்ப்புகளையும் பயன்படுத்தி கிராமத்தில் சிறப்பாக செயல்பட உள்ளதாக மாணவர்கள் கருத்துக்கள் பகிர்ந்தனர். மன்ற நிர்வாகி சதீஷ் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகி ரேகா செய்து இருந்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....