Home மாநிலங்கள் புதுச்சேரி குறிஞ்சி நகர் மற்றும் விரிவாக்கம் பகுதியில் சாலைகள் சரி செய்து தருவேன் - வைத்தியநாதன் உறுதி

குறிஞ்சி நகர் மற்றும் விரிவாக்கம் பகுதியில் சாலைகள் சரி செய்து தருவேன் – வைத்தியநாதன் உறுதி

- Advertisement -

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கமலா அறக்கட்டளை நிறுவனருமான வைத்தியநாதன் போட்டியிடுகிறார். அவர் தினமும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் குறிஞ்சி நகர் விரிவாக்கம் பகுதியில் வீடு, வீடாக சென்று `கை’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

- Advertisement -

அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் கூட்டணி கட்சிகள் மற்றும் கமலா அறக்கட்டளை மகளிர் குழுக்கள் கலந்து கொண்டனர்.

வாக்கு சேகரிப்பின்போது, வேட்பாளர் வைத்தியநாதன் வாக்காளர்களிடம், குறிஞ்சிநகர் மற்றும் அதன் விரிவாக்கம் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக கிடக்கிறது. நான் வெற்றிபெற்றதும் சாலைகள், அனைத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். 10&வது குறுக்கு தெருவில் உள்ள போலீஸ் பூத்தில் காவலர்கள் 24 மணி நேரமும் பணி செய்ய நடவடிக்கை எடுப்பேன். குடிசை வீடுகள் கல்வீடுகளாக மாற்றப்படும். இதற்கான நிதியை அரசிடம் பெற்றுத்தருவேன். தொகுதியில் யாருக்கு என்ன உதவிகள் தேவையோ, அவர்களுக்கான உதவியை அரசிடம் போராடி பெற்றுத்தருவேன் என கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவி ஏற்ற ஒரே தலைவர் ரங்கசாமி-துணை முதல்வராகிறார் நமச்சிவாயம்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான...

உதயமானது உதயசூரியன் பாகூரில் முதன் முறையாக….

பாகூர் தொகுதியில் முதல் முறையாக உதயசூரியனை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில்குமாரையே சாரும். குருவிநத்தம் தொகுதியை மையமாக வைத்து அரசியல் செய்த அவரது தந்தை ராயல் ராமநாதன் வழியில்...

புதுச்சேரியில் அதிமுக கூடாரம் காலி-1980ம் ஆண்டிற்கு பிறகு…

கடந்த 1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து பேசியதால், அதனுடைய எதிர்ப்பு காரணமாக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி...

கபசூர குடிநீர் – தினமும்….

கொரோனா இரண்டாவது அலை வெகுவேகமாக பரவி வரும் இந்த நேரத்திலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் காப்பாற்று வதற்காக 40 வாரங்களை கடந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அறக்கட்டளை...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....