Home மாநிலங்கள் இந்தியா ஆட்சிக் கவிழுமா... புதுச்சேரியில் பரபரப்பு...

ஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…

- Advertisement -

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உட்பட அவரது ஆதரவாளர்கள் தங்களது பதிவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றுவிட்டனர். அவரைத் தொடர்ந்து ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தானும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றார்.

இதனிடேய அரசியலில் இருந்தே விலக போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்தார். 25 ஆண்டு எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ஏனாம் பிராந்தியத்தில் பாராட்டு விழாவும், சட்டசபையில் விருதும் வழங்கப்பட்டது. இதன்பின் தனது அமைச்சர் பதவியை மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பி வைத்தார். சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகம், புதுவையில் அரசு அளித்த வீடு, அரசு கார் ஆகியவற்றையும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஒப்படைத்திருந்தார்.

- Advertisement -

மேலும், தனது துறை சார்ந்த கோப்புகளையும் பார்க்கவில்லை. இருப்பினும், தன்னிடம் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் ஏதும் தரவில்லை என நாராயணசாமி மறுப்பு தெரிவித்தார். ராஜினாமாவை முதலமைச்சர் நாராயணசாமி ஏற்காததால் அவர் பதவியில் நீடித்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரவு தனது எம்.எல்.ஏ. பதவியையும் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவுக்கு மல்லாடி கிருஷ்ணராவ் அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே பிப்ரவரி 16ம் தேதி காலை 9.30 மணியளவில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், சபாநாயகர் சிவகொழுந்து வீட்டிற்கு சென்று சிறிதுநேரம் பேசினார். பின்னர் சட்டசபை வளாகத்துக்கு ஜான்குமார் வந்தார். அவரைத்தொடர்ந்து சபாநாயகர் சிவகொழுந்துவும் சட்டசபைக்கு வந்தார். சபாநாயகர் அறையில் சிவகொழுந்துவிடம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து ஜான்குமார் கைப்பட எழுதிய கடிதத்தை அளித்தார். சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

புதுவையில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒரு தொகுதி காலியாக இருந்தது. தொடர்ந்து, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் என காங்கிரசில் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 10 ஆக குறைந்துள்ளது. சபாநாயகரோடு சேர்த்து ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 10, தி.மு.க. 3, ஆதரவு தரும் சுயேச்சை ஒருவர் என 14 பேர் ஆதரவு உள்ளது.

எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4 என 11 பேர் உள்ளனர். நியமன பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சேர்த்தால் எதிர்கட்சியில் 14 பேர் உள்ளனர்.தற்போது புதுவை சட்டசபையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சேர்த்து 28 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால்தான் மெஜாரிட்டி கிடைக்கும். காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க., சுயேச்சையுடன் 14 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது. இதனால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது. இதனால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சபாநாயகர் சிவகொழுந்து நிருபர்களிடம் கூறியதாவது: மல்லாடிகிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக கடிதம் எனக்கு வரவில்லை. என்னை போன் மூலம் தொடர்புகொண்டு ராஜினாமாவை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். என்னை வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ராஜினாமா கடிதத்தை விரைவு தபாலில் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அவரே போன் செய்து கூறியதால் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. நேரில் வந்து ஜான்குமார் அளித்த ராஜினாமா கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரண்டு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா பரபரப்புக்கு இடைய அமைச்சர் கந்தசாமி பேசிய வீடியோ சமூகவளதங்களில் வைரலாக பதவியது.

அந்த வீடியோவில், பிரதமர் நரேந்திரமோடியும், கவர்னர் கிரண்பேடியும் ஜனநாயகத்துக்கு விரோதமாக மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய நிதி தராமல் பிரதமர் மோடியும், உரிமைகளை தராமல் கிரண்பேடியும் நசுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர். தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகின்றனர். புதுவையில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து கட்சித்தலைமைக்கு தெரிவித்துள்ளோம். காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் புதுவைக்கு வந்துள்ளார். அவரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம். எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து பேச உள்ளோம். 5 ஆண்டுகள் முழுமையாக காங்கிரஸ் அரசை ஆட்சி செய்யவிடாமல் பா.ஜனதாவினர் தடுக்கின்றனர். இந்த ஜனநாயக படுகொலைக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் புதுவை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ்குண்டுராவ், சஞ்சய்தத் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, எங்கள் அரசுக்கு பெரும் பான்மை உள்ளது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவோம் என தெரிவித்தார். மெஜாரிட்டி இழந்ததால் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்கள் கூறியுள்ளார்களே? என கேட்டபோது, எதிர்கட்சிகள் அப்படித்தான் கூறுவார்கள், எங்கள் அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது என தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி புதுவைக்கு வருகிறார். இவர் வந்து சென்ற பின்,

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....