Home மாநிலங்கள் புதுச்சேரி தேர்தல் புறக்கணிப்பா - ஆண்டு விழாவில் ரங்கசாமி ஆவேசம்

தேர்தல் புறக்கணிப்பா – ஆண்டு விழாவில் ரங்கசாமி ஆவேசம்

- Advertisement -

கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை ரங்கசாமி துவக்கினார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்காக புதிய கட்டிடம் கடந்த ஆண்டு இசிஆர் சாலையில் பூமி பூஜை போடப்பட்டு குறுகிய காலத்தில் திறக்கப்பட்டத. இந்நிலையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 11ம் ஆண்டு துவக்க விழா புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி கட்சி கொடி ஏற்றி வைத்து அப்பா பைத்தியம்சுவாமி படத்துக்கு பூஜைசெய்து தொண்டர்களுக்குஇனிப்பு வழங்கினார்.

பின்னர் ரங்கசாமி பேசியதாவது:

- Advertisement -

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கம் 10 ஆண்டுகளை கடந்து 11&ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நமது ஆட்சிக் காலத்தில் மக்களின் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினோம்.மாணவர்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தினோம். தற்போது மிகவும் மோசமானஆட்சி நடக்கிறது. கடந்த 5 ஆண்டாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகளை கூட அரசு செய்யவில்லை. 5 ஆண்டில் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. ஏதாவது செய்வார்கள் என மக்களும், நாமும் எதிர்பார்த்தோம்.

ஆனால் ஒன்றையும் செய்யவில்லை. மாணவர்களுக்கு தனியாக திட்டங்கள் உள்ளதா? என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த அரசால் மாணவர்களுக்கு சாப்பாடு கூட வழங்க முடியவில்லை. மத்திய சமையல் கூடத்தை இடித்து வைத்துள்ளனர். நாம் நல்ல சாப்பாடு வழங்கினோம்.அனைத்து தரப்பு மக்களைப் போல மாணவர்களையும் இந்த அரசு ஏமாற்றி விட்டது. சட்டபைக்கு உள்ளேயும் செல்ல முடியவில்லை. வெளியிலும் போக முடியவில்லை. அனைத்து வழிகளையும் தடுத்து வைத்துள்ளனர்.புதுவைக்கு மாநிலஅந்தஸ்துதான் வேண்டும்என்பதே என்.ஆர்.காங்கிரசின்நிலைப்பாடு. மாநில அந்தஸ்து பெற்றால்தான் புதுவை வளர்ச்சி பெறும். இது நமது1 0 ஆண்டு போராட்டம்.

தற்போது 11&ம் ஆண்டில்அடி யெடுத்து வைத்துள்ளோம்.மாநில அந்தஸ்து வேண்டும்என வலியுறுத்தி மாநாடுநடத்தினோம். சட்டசபையில்பல தீர்மானம் கொண்டுவந்தோம்.பின்னர் வந்த அரசும் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. ஆனால் மத்தியஅரசு புதுவைக்கு மாநிலஅந்தஸ்தை வழங்கவில்லை. மாநில அந்தஸ்து வழங்கும் வரை தேர்தலை புறக்கணிப்போம் என அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலை புறக்கணிக்க தயார். மற்ற கட்சிகள் தயாரா? மாநில அந்தஸ்து மட்டுமே புதுவையை வளமாக்கும். விரைவில் புதுவையில் தேர்தலை சந்திக்க உள்ளோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

என்.ஆர்.காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ஆர்.காங்கிரஸ்ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமையும். நம் கட்சி உறுப்பினர்கள் அதிகளவில் சட்டசபைக்கு தேர்வாக வேண்டும்.
இதற்கு அனைவரும் ஒத்துழைத்து உழைக்க வேண்டும். புதுவை மக்கள் என்.ஆர்.காங்கிரசுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். புதுவை மட்டுமின்றி 4 பிராந்தியத்திலும் கட்சியை மதித்து தேடுகின்றனர். நாம் மக்களிடம் போய்பேச வேண்டும். இந்த ஆட்சியின் அவலத்தை, தவறுகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த அரசு உரிமையை இழந்து நிற்கிறது. சாலைகள் கூட சரியில்லை. ஹெல்மெட்டுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கின்றனர்.

அதிகாரிகளுக்கு மக்கள் படும் சிரமம் தெரியாது. ஆட்சியில் உள்ளவர்கள்தான் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். வேலையின்றி, சம்பளமின்றி மக்கள்அவதிப்படுகின்றனர். எப்படி அபராதம் கட்டுவார்கள். மக்கள் கொடுக்கும் அபராதத்தில் தான்ஆட்சி நடத்த வேண்டுமா? இவர்களைப்பற்றி குறை கூறி பிரயோஜனமில்லை. இந்தஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள் உண்ணாவிரதம், தர்ணா போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ்காரர்கள் கருப்புசட்டை போடுவார்களா? இவர்கள் கருப்பு சட்டை போட்டுபோராட்டம் நடத்துகின்றனர்.ஆட்சி செய்பவர்களேகருப்புச்சட்டை போட்டால்மக்கள் என்ன நினைப்பார்கள்? இந்த ஆட்சி தூக்கியெறியப்படவேண்டும். இதற்கு புதுவை மக்கள் தயாராக உள்ளனர்.

என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் மாபெரும் வெற்றி பெறும். சிலதீய சக்திகள் நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இதனை முறியடிப்போம். புதுவையை மீட்டோம், புதுவையை காப்போம், புதுவை வளர்ச்சியடைய பாடுபடுவோம் என கோஷத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராவோம் என பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், திருமுருகன், சுகுமாரன், கோபிகா, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் வாரிய தலைவர்கள் ஞானசேகரன், பாலமுருகன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துª காண்டனர்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....