புதுச்சேரி பெனவோலன்ட் அமைப்பு சார்பில் குளிர் காலத்தை முன்னிட்டு திருநங்கைகளுக்கு போர்வைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது குளிர் காலம் தொடங்கியதை முன்னிட்டு புதுச்சேரி வாணரப்பேட்டை மெரீனா பீச் அருகில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வரும் சுமார் 125க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு போர்வைகளை புதுச்சேரி பெனவோலன்ட் அமைப்பின் சார்பில் அமைப்பின் தலைவர் விஜயகுமார் திருநங்கைகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைப்பின் தலைவர் விஜயகுமார் அவர்களின் நண்பர் செந்தில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
மேலும், குளிர் காலத்தையொட்டி போர்வைகளை பெற்றுக் கொண்டு திருநங்கைகள் பெனவோலன்ட் அமைப்பிற்கு நன்றி கூறினார்கள்.