இலாஸ்பேட்டை தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்ட பெத்துச் செட்டிப் பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமண்ய சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பிறகு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கமலா அறக்கட்டளை நிறுவனருமான வைத்தியநாதன் தலைமையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி கலந்து கொண்டு இலாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்பு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், பச்சை பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பொருட்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் இலாஸ்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் மற்றும் லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள், கமலா அறக்கட்டளையின் மகளிர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்