புதுவை காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் அருள்மிகு கருமுத்துமாரியம்மன் கோவிலில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான கல்யாணசுந்தரம் அவர்களின் பி.எம்.எல் கல்யாணசுந்தரம் அறக்கட்டளை சார்பில் தொகுதி மக்களுக்கு பொங்கலுக்காக குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் காலாப்பட்டு தொகுதி மக்களுக்கான தனது சேவையை டிஜிட்டல் மையம் ஆகும் முயற்சியாக www.pmlk.in வெப்சைட் மற்றும் pmlk மொபைல் ஆப் (ஆண்ட்ராய்ட் செயலி) அறிமுக விழா, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை தொடக்க விழா என மூன்று நிகழ்வுகள் அடங்கிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. கல்யாணசுந்தரம் அவர்கள் பொங்கள் மளிகை பொருட்கள் தொகுதி மக்களுக்கு வழங்கி, வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மேலும் வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் பயன்பாடுகள் குறித்து குறிப்பிடுகையில்,
பி.எம்.எல். கல்யாணசுந்தரம் மக்கள் இயக்கம் என்ற அறக்கட்டளை வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை பல்லாண்டுகளாக ஆற்றி வந்துள்ள நிலையில் அச்சேவையினை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக, தற்போது வெப்சைட் மற்றும் மொபைல் செயலி ஆப் தொடங்கி உள்ளோம்.
இவைகளை பயன்படுத்தி காலாப்பட்டு தொகுதி மக்கள் தங்களது பகுதிக்கான தேவைகளான சாலை வசதி, குடிநீர் பிரச்சனை போன்ற எதுவாக இருந்தாலும் எங்களுக்கு தெரியப்படுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தொகுதி மக்கள் தங்களது பகுதிக்கு நிரந்தரமான தேவைகளை டிஜிட்டல் வழியாக தெரியப்படுத்தினால் மக்களின் ஆலோசனையாக அவற்றை கருதி வரும் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளனர் என்றார்.
அது மட்டுமல்லாது தொகுதி இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொகுதி மக்கள் தங்களது பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்ட விவரங்களை எங்களது வெப்சைட் மற்றும் ஆப் வழியாக தெரிவித்தால் வேலை வாங்கி தர நடவடிக்கை எடுக்க உள்ளாதாகவும், இதன் மூலம் மக்கள் சிரமத்தை குறைக்கவும், வீட்டிலிருந்தே பயனடையவும் ஏதுவாக எவ்வித ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
விழாவில் பல அரசியல் தலைவர்கள், தொகுதி மக்கள், இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.