தற்போது பெய்து வரும் கடும் மழையையொட்டி புதுச்சேரி அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாத்தூரில் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்த பெனேவோலண்ட் அமைப்பின் தலைவர் முனைவர் விஜயகுமார் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்துக்கே தேடிச் சென்று உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, பெனேவோலண்ட் அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.