Home மாநிலங்கள் புதுச்சேரி ஆதாரமற்ற பச்சைப் பொய்களை, பொது இடங்களில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதல்வர் மற்றும் அமைச்சருக்கு ஆம்...

ஆதாரமற்ற பச்சைப் பொய்களை, பொது இடங்களில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதல்வர் மற்றும் அமைச்சருக்கு ஆம் ஆத்மி கண்டனம்….

- Advertisement -

தமிழகத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசம் இணைக்கப்படவுள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு ஆம் ஆத்மி கட்சியும் மற்றும் மக்கள் வாழ்வுரிமை இயக்கமும் சேர்ந்து கொடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும், சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரப்புரையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல், தமிழகத்துடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினை, நடுவண் அரசு இணைக்க உள்ளதாக, பொய் பிரச்சாரம் செய்து வருவதை ஆம் ஆத்மி கட்சியும், மக்கள் வாழ்வுரிமை இயக்கமும், வன்மையாக கண்டிக்கின்றன.
புதுச்சேரியின் விடுதலை வரலாறு மற்றும் அதன் தனித்தன்மையை படித்தறியாமல், வழக்கம் போல் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி அவர்களும், தாங்கள் வகிக்கும் பதவியின் மாண்பினை மறந்து விட்டு, வாய் கூசாமல் புதுச்சேரி மக்களிடம் தேர்தல் பரப்புரை என்ற பெயரில், தங்களது ஆட்சியின் இயலாமையை மூடி மறைப்பதற்கு, தொடர்ந்து பொய்யுரையினை அள்ளி வீசி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்பாடாகும்.

- Advertisement -

புதுச்சேரி 1954ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் விடுதலை அடைந்தது. 1956ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு அவர்களும், பிரெஞ்சு அதிகாரிகள் பியர்லாண்டி மற்றும் கேவல் சிங் ஆகியோரால் சர்வதேச ஒப்பந்தம் (treaty of sessions) போடப்பட்டது. மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி 1962ஆம் ஆண்டு புதுச்சேரியின் நான்கு மண்டலங்களும் (புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி) இந்திய ஆட்சிப் பரப்புடன் இணைந்தது. மாநிலமாக அதிகாரம் பெற்றிருந்த புதுச்சேரி 1963 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு அவர்களால், அதிகாரம் இல்லாத யூனியன் பிரதேசமாக அரசியல் அதிகாரம் குறைக்கப்பட்டது.
புதுச்சேரியின் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் 1964ஆம் ஆண்டும், முதல் பாராளுமன்றத் தேர்தல் 1967 ஆம் ஆண்டும் நடைபெற்றது. இதில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி மற்றும் இந்தியாவை காங்கிரசு அரசுதான் ஆட்சி செய்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிகாரமில்லாத புதுச்சேரியின் யூனியன் பிரதேச சட்டம் 1963-ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, மாற்றத்தைக் கொண்டு வராமல், பல ஆண்டு காலம் நடுவண் அரசின் அமைச்சராக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னும், சோனியா காந்திக்கு பின்னும் அதிகார கோலோச்சிய முதல்வர் நாராயணசாமி அவர்கள் தனது தவறையும், இயலாமையும், மூடி மறைப்பதற்காக மக்கள் மத்தியில் தமிழகத்துடன் புதுச்சேரி இணையப் போகிறது என கோயாபல்ஸ் பிரச்சாரம் செய்வது, அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழகல்ல என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என எமது அமைப்புகள் சார்பாக புதுச்சேரி காங்கிரசு அரசுக்கு ஊடக அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்துகின்றோம்.

எனவே புதுச்சேரிமுதல்வர் நாராயணசாமி அவர்களும், அமைச்சர் கந்தசாமி அவர்களும் மற்றும் காங்கிரசு கட்சியினரும், இத்தகைய ஆதாரமற்ற பச்சைப் பொய்களை, பொது வழியில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
1979 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது, இத்தகைய இணைப்பு கருத்து இருந்ததென குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் புதுச்சேரி மக்களிடம் பதற்றம் ஏற்பட்டது. அது நீண்ட போராட்டமாக மாறியது. அதுபோன்ற சூழல் தற்போது புதுச்சேரியில் இல்லாத நிலையில், காங்கிரசு ஆட்சியின் நலத்திட்ட முடக்கங்களையும், நிதி மற்றும் நிர்வாக நெருக்கடிகளையும் மூடி மறைப்பதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட முதலமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர் கந்தசாமியும், தமிழகத்துடன் புதுச்சேரி இணைப்பு என்ற பொய்ப் பிரச்சாரம் செய்து, பதற்றம் ஏற்படுத்தக் கூடாது ஆம் ஆத்மி கட்சியும் மக்கள் வாழ்வுரிமை இயக்கமும் கூட்டாக சேர்ந்து ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....