Home மாநிலங்கள் புதுச்சேரி பூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு - புதுவை பப்ளிக் பள்ளியில்

பூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு – புதுவை பப்ளிக் பள்ளியில்

- Advertisement -

புதுச்சேரி மகாவீர் நகரில் இயங்கி வரும் புதுவை பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு சானிடைசர் மற்றும் வெப்பமாணி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு, பின்பு பூங்கொத்து கொடுத்து மாணவர்களை ஆசியர்கள் வரவேற்றார்கள்.

உலகையே அச்சுறுத்திய கொரோனா என்ற கொடிய நோயின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தற்போது புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடுகளோடு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பள்ளிகள் இயங்க புதுச்சேரி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி லாஸ்பேட்டை மகாவீர் நகரில் உள்ள புதுவை பப்ளிக் பள்ளி புதுச்சேரி அரசின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் புதுவை பப்ளிக் பள்ளி திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முககவசம், சானிடைசர் மற்றும் உடல் வெப்பமாணி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு பின்பு, பள்ளியின் தாளாளர் திருமதி.பூங்காவனம் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

பள்ளியின் முதல்வர் மாணவர்களுக்கு கோவிட் 19 பற்றிய விழிப்புணர்வு விளக்கத்தை எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்கி கூறினார்.

பின்னர், வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு முககவசம் மற்றும் சனீடைசர் கொடுத்து தனி மனித இடைவெளி விட்டு வகுப்பில் அமர வைத்து பாடங்கள் எடுக்கப்பட்டது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....