Home மாநிலங்கள் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி மலரும் - இந்தியா முழுவதும்…. (மேற்கு)...

காங்கிரஸ் ஆட்சி மலரும் – இந்தியா முழுவதும்…. (மேற்கு) வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் எம்.பி.வெங்கடேசன்…

- Advertisement -

புதுச்சேரி திருபுவனை தொகுதி (மேற்கு) வட்டார காங்கிரஸ் பொறுப்பாளரும், இந்திய அரசு இராசாயனம் (ம) உரங்கள் துறை ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.பி.வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

மாண்புமிகு பிஜேபியின் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே. புதுவை மாநில உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத நாராயணசாமி என கிண்டலடித்து இருக்கிறிர்கள். பஞ்சாயத்து தேர்தலை நடத்த ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் அதிகாரியை புதுவை அரசு நியமித்தது. உங்களின் மாநில ஏஜென்ட் திருமதி. கிரண்பேடி அம்மையார் அவரது நியமனத்தை ரத்து செய்துவிட்டார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த நிதி உதவி கேட்ட போது, அந்த நிதியையும் தாங்கள் தர மறுத்து விட்டீர்கள். எப்படி இந்த நிதியை வைத்து, எந்த தேர்தல் ஆணையரை வைத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும். புரட்சி முதல்வர் எந்த நலத் திட்டங்களைத் தீட்டி மக்களுக்கு செய்ய முன்வந்தாலும் அந்த கோப்புகளை கிடப்பில் போடுவது இவரது வாடிக்கையாகி விட்டது. தவறு செய்வதையே குறிக்கோளாக வைத்து இருக்கும் கிரண்பேடி அம்மையார் முதல்வரை குறை கூறுவதா—?

- Advertisement -

புரட்சி முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது கருணையால் குஜராத் மாநில முதல்வராக இருந்தபொழுது அதிக நிதியை பெற்று ஆட்சி நடத்தி அதன் பயனாக பிரதமர் நாற்காலி பிடித்த நரேந்திர மோடி அவர்கள் நாராயணசாமியை குறை கூறுவது அபத்தமான பொய். பொய் ஒன்றை மட்டுமே கூறி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிஜேபி வரும் காலங்களில் பணத்தை மட்டுமே மூலதனமாக வைத்து வெற்றி பெற முடிவு செய்துள்ளது .இதையும் மீறி மக்கள் வாக்களித்தால் ஓட்டு போடும் இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முடிவு செய்துள்ளனர்.இந்த தில்லு முள்ளு தேர்தலுக்கு உறுதுணையாக தேர்தல் ஆணையமே செயல்படுவது மிகவும் வேதனைக்குரிய செயல். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் உளவுப்பிரிவு ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது இருந்தது. ஆனால் இப்பொழுது இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பிஜேபியின் ஆட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக செயல்படுவதாக மக்கள் மனம் குமுறுகின்றனர்.இதே நிலை நீடித்தால் வரும் காலங்கள் ராணுவ ஆட்சி அல்லது அதிபர் ஆட்சி ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் சூழ்நிலை தெரிகிறது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் ஆக இருக்கும் கிரண்பேடி அம்மையார் ஒரு படி மேலே போய் ஜனநாயக ஆட்சியின் குரல் வலையை நெறித்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறார். வெள்ளைக்காரனிடம் இருந்து இந்த மக்களை காப்பாற்றிய காங்கிரஸ் கட்சியால் இந்த கொள்ளைக்காரரிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

கிரண்பேடி அவர்கள் ஹிட்லரைப் போல் செயல்படுகிறார். ஹிட்லரின் கொடுங்கோல் செயலுக்கு மக்கள் அளித்த தண்டனையை அம்மையார் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்‌. மக்கள் வளர்ச்சி பாதையை நோக்கி நடை போட முயற்சித்த அத்தனை திட்டங்களையும் கிடப்பில் போட்டு புதுச்சேரி மக்களின் துரோகியாக மாறிவிட்டார் கிரண்பேடி அவர்கள் .முதல்வர் அவர்கள் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தீட்டிய திட்டங்கள்,ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 11, 710 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அனுப்பிய கோப்புகள் அனைத்தும் கிடப்பில் போட்டுவிட்டார். அவை அனைத்தும் கவர்னர் மாளிகையில் மூச்சுமுட்டி கண்ணீர் வடிக்கிறது.இதற்கு விடிவு காலம் வேண்டுமென்றால் கிரண்பேடி அம்மையார் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் அவற்றை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார் புதுச்சேரியில் மக்கள் ஆட்சி நடக்கிறது. இதை துணைநிலை ஆளுநர் அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில் இவரை கண்டித்து புதுச்சேரி மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டக் களம் இறங்குவர். இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.இந்த புதுச்சேரி மக்களின் போராட்டத்திற்கு புதுச்சேரி புரட்சி முதல்வர் தலைமையில் மாபெரும் அறப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டம் படிப்படியாக கிராமப்புறங்களில் மக்கள் ஒன்றுகூடி களம் இறங்கினால் மிகப்பெரிய அளவில் அம்மையாருக்கு தலைவலி ஏற்படும்.

அவரே பதவி விலகும் நிலைக்கு தள்ளப்படுவார்.இவரது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தாலும் பாதிக்கப்படுவது புதுச்சேரி மக்கள். இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். பிஜேபி தலைகீழாக நின்றாலும் ஆட்சிக்கு வர முடியாது. பிஜேபிக்கு தைரியம் இருந்தால் இப்போது நியமன எம்எல்ஏ வாக இருக்கும் மூன்று பேருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கவேண்டும். மூன்று பேரும் டெபாசிட் வாங்க மாட்டார்கள் . இந்தியாவை ஆண்டவன் ஆங்கிலேயன் புதுச்சேரியை ஆண்டவன் பிரெஞ்சுக்காரன். உங்களின் வெத்துவேட்டு புதுச்சேரி மக்களிடம் பலிக்காது. உங்கள் தில்லுமுல்லு வேலைகள் 2024 ஆம் ஆண்டு அறவே ஒழிந்து போகும் . காங்கிரஸ் கட்சி ஆட்சி இந்தியா முழுவதும் மலரும். தாமரை தண்ணீரில் உங்கள் கண்ணீரில் தள்ளப்படும் என கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....