புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஏ.எஸ்.கே மஹாலில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் 10ம் ஆண்டு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நிறுவனத் தலைவர் அன்பழகனரார் மற்றும் இணைவோம் மீனவராக மக்கள் ஒருங்கிணைப்பு இயக்கத் தலைவர் ஏகா புகழேந்தி கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் புதுச்சேரி மாநில மீனவர் பேரவை சார்பில் தலைவர் வழக்கறிஞர் தருமலிங்கம், கௌரவத் தலைவர் புத்துப்பட்டார், பொதுச் செயலாளர் சிட்டிபாபு, இளைஞர் அணித் தலைவர் வசந்தன், மாநில செயலாளர் செல்வராஜ், துணைத் தலைவர ஜெயவேலு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.