புதுச்சேரி மாநில தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் வழக்கறிஞர் மலை.தருமலிங்கம் தலைமையில் புதுச்சேரி கடற்கரையில் 16-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. டூப்ளக்ஸ் சிலையிலிருந்து மவுன ஊர்வலமாக வந்து ஊர்வலமாக வந்து காந்தி சிலை பின்புறம் ஆழிப்பேரவையில்(சுனாமியால்)உயிர்நீத்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதில் நூறுக்கும் மேற்பட்ட மீனவப்பெண்கள் சீருடை அணிந்து பங்கேற்றார்கள். உடன் கவுரவ தலைவர் புத்துப்பட்டார், மாநில பொதுச்செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதுச்சேரி மாநில அனைத்து மீனவர் அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.