Home கட்டுரைகள் தமிழக அரசியலின் மூன்று எழுத்து மந்திரம் எம்ஜிஆர்....

தமிழக அரசியலின் மூன்று எழுத்து மந்திரம் எம்ஜிஆர்….

- Advertisement -

“மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சு இருக்கும்” என்று பாடலை கடந்த 56 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1964ம் ஆண்டு வெளிவந்த தெய்வத்தாய் படத்தில் பாடியவர் எம்ஜிஆர். அவர்¢ அன்று பாடியது போலவே கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அவர் மறைந்த பிறகும், சுமார் 33 ஆண்டுகாலமாக அவரைப் பற்றி பேசாத அரசியல் கட்சிகள் இல்லை.

மேலும், தற்போது யார் அரசியலுக்கு வருவதாக இருந்தாலும், அரசியல் கட்சி துவங்கும் எண்ணம் வருபவர்களுக்கும் “நான் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன்” என்று கூறிக் கொண்டுதான் அரசியலுக்கே வருகிறார்கள்.

- Advertisement -

தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு இரண்டு உதாரணங்களை சொல்லாம் ஒன்று காமராஜர் ஆட்சி மற்றொன்று எம்ஜிஆர் ஆட்சி. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியும், தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள்.

எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில்தான் ‘எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன்’ என்று ரஜினிகாந்த் முதலில் பேசினார். அதன்பிறகு எம்ஜிஆரை தொடர்புப் படுத்தி அடிக்கடி பேசுகிறார். ரஜினி ஆதரவாளரான தமிழருவி மணியன், எம்ஜிஆரை போல் ரஜினியும் சாதிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து, ‘எம்ஜிஆர் ஆட்சி தருவேன்’ என்கிறார் நடிகர் ரஜினிகாந்தும், ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன், விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் சொல்லிக் கொண்டார். பாக்கியராஜ் கூட எம்ஜிஆர் வாரிசு என்று கட்சி தொடங்கி கையை சுட்டுக்கொண்டார். நடிகர் விஜய் கூட எம்ஜிஆர் போல் ஏழைகளுக்காக பாடுபடுவேன் என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். டி.ராஜேந்தர் கூட எம்ஜிஆர் ஆட்சியை போல் என்னாலும் ஆள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.
வட இந்திய நடிகரும், ஒரு சில தமிழ் படங்களில் வில்லான நடித்தவருமான “சோனு சூட்” புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து இலவசமாக அவர்கள் போகும் இடங்களுக்கு செல்ல உதவி செய்தார். ஹரியாணாவில் டவர் கிடைக்காததால், ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி சிறுமி மரத்தில் ஏறி அமர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார் என்ற செய்தி கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்தார்.

மேலும், தீ விபத்தில் தன்னுடைய புத்தக பை எரிந்து விட்டது என்று ஒரு சிறுமி கதறி கதறி அழுத வீடியோவை பார்த்த அந்த நடிகர், அந்தக் குழந்தைக்கு புதுப் புத்தகங்கள், புதுப்பை எல்லாவற்றையும் அந்த குழந்தை இருக்கும் இடத்தை தேடி அனுப்பி வைத்தார். இப்படி அந்த நடிகர் மனித நேயத்துடன் செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

தற்போது ஆட்சியில் அமர துடிக்கும் நடிகர்கள் மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என்று என்ன சொல்வார்கள் என்று அவர்களுக்கு தெரியாது
தற்போது பிரச்சாரங்களில் கமல், “நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்று நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார்.

எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது. மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து.

அதன் பிறகு அவர் அதிமுக.வில் சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்ட விடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.

எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது.

நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், சமீபத்தில் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். அந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாக பரவியது. குறைந்தபட்சம் அவரது குடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.

தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.

வேளாண் சட்டத்திருத்தம், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் இதுபற்றி எல்லாம் ரஜினியின் கருத்து என்ன? இப்போது அவர் நியமித்து இருக்கும் 2 அரசியல் ஆலோசகர்கள் கூட, ‘எல்லாம் ஐயா சொல்வார்’என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர் அப்படி எல்லாம் யாரையும் பேச விடாமல் தடுத்தது கிடையாது. பல அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்லிகொண்டுதான் இருந்தார்கள்.

எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?

மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி – தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.

எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா?

ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி விஜயகாந்த் மகனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ரஜினி மீதுள்ள சந்தேக நிழல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

ஆனால், விஜயகாந்தோ ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சிய துவங்கினார். கட்சி துவங்கியுடன் பாமக.வின் கோட்டையான விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவே அவரை தேடிப் பிடித்து கூட்டணிக்கு அழைத்தார். விஜயகாந்தின் தமிழ் உணர்வு, அரசியல் துணிவு, சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை.

நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.

மேலும், சமீபத்தில்கூட திமுக தலைவர் ஸ்டாலின் கூட ஓரு கூட்டத்தின் போது எம்ஜிஆர் பாடலை பாடி வருகிறார்.

சினிமா கதாநாயகர்கள் ரஜினி மற்றும் கமல் மட்டுமல்லாமல் சினிமாவிலிருந்து வரும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகிவிடுவார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா…

புதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி கடலு£ர் ரோட்டில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி மாநிலத் தலைவர்...

ஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உட்பட அவரது ஆதரவாளர்கள் தங்களது பதிவியை...

100 ஆண்டான ஆலமரம்…

மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரங்களை கண்டெடுத்து அறம் சேவை மையம் சார்பில் அறம் நிஷா தலைமையில் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.

பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை…

புதுச்சேரியில் மிஷின் வீதியில் உள்ள சம்பா கோவில் அருகில் பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு பெனவோலன்ட் அமைப்பு சார்பில் பார்வையற்றவர்களுக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது....
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....