Home மாநிலங்கள் புதுச்சேரி சிறுவர் பாடல்கள் நூல் வெளியிட்டு விழா - பாவலர் கலியபெருமாள் எழுதிய.....

சிறுவர் பாடல்கள் நூல் வெளியிட்டு விழா – பாவலர் கலியபெருமாள் எழுதிய…..

- Advertisement -

புதுச்சேரியில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு, புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். வரும் டிசம்பர் 27-ம் தேதி வரை 10 நாட்களுக்கு கொரோனா விழிப்புணர்வு 24-வது தேசியப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா விழிப்புணர்யொட்டி துவங்கிய தேசியப் புத்தகக் கண்காட்சியில் புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி, பெத்துச்செட்டிப்பேட்டையைச் சேர்ந்த பாவலர் கலியபெருமாள் எழுதிய சிறுவர் பாடல்கள் என்ற
லை முதல்வர் நாரயாணசாமி வெளியிட்டார்.
இந்நிகழ்வில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், எம்எல்ஏ ஜான்குமார், கண்காட்சிக்குழுத் தலைமைக் காப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி, சிறப்புத் தலைவர் முனைவர் பாஞ். ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

- Advertisement -


இப்புத்தகக் கண்காட்சி 24 வது ஆண்டாக நடக்கிறது. புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான நாடு முழுவதுமிருந்து சுமார் 50 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்லது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
இக்கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் 15 நூல்கள் வெளியிடப்பட்டன. புதுச்சேரி எழுத்தாளர்களுக்கு கண்காட்சியில் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து தமிழ் திசை பதிப்பக நூல் அரங்கும் உள்ளது. கண்காட்சியில் இடம்பெறும் நூல்களுக்கு பத்து சதவீதம் தள்ளுபடி உண்டு. காலை 11 மணி முதல் இரவு 8 வரை கண்காட்சி நடக்கும்.
கண்காட்சி நிர்வாகிகள் கூறுகையில், “கொரோனா தொற்றையொட்டி” மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் புத்தக்கண்காட்சி நடப்பாண்டு நடைபெறுகிறது. கண்காட்சிக்கு வருவோர் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கண்காட்சி வளாகத்தில் சானிடைசர் மூலம் கைககளை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். கண்காட்சி அரங்கில் சமூக இடைவெளியுடன் புத்தகங்களைபார்வையிட வேண்டும். பார்வையாளர் வசதிக்கு ஏற்ப புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.” என்றனர்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....