Home மாநிலங்கள் இந்தியா புதுச்சேரி அரசு சார்பு ஊழியர்கள் கோரிக்கை-முதல்வர் நாராயணசாமிக்கு...

புதுச்சேரி அரசு சார்பு ஊழியர்கள் கோரிக்கை-முதல்வர் நாராயணசாமிக்கு…

- Advertisement -

புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,

- Advertisement -

ஒருமுறையாவது இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி விவாதித்தது உண்டா?

- Advertisement -

ரோடியர் மில்லை திறப்பதற்கு, சுதேசி மில்லை திறப்பதற்கு, பாரதி மில்லை திறப்பதற்கு, லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பதற்கு, பாசிக், பாப்ஸ்கோ, கான்பெட், கேவிகே போன்ற பொதுத்துறையில் பட்டினி கிடக்கும் பத்தாயிரம் ஊழியர்கள் சம்பளத்திற்கு, சம்பளம் இல்லாத நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து உழியர்கள், சம்பளமில்லாமல் வாடும் புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள், சம்பளமில்லாமல் வாடும் காதிபோர்டு ஊழியர்கள், சம்பளமில்லாமல் வாடும் குடிசைமாற்று வாரிய ஊழியர்கள், சம்பளமில்லாமல் வாடும் விவசாய பண்ணை ஊழியர்கள், சம்பளமில்லாமல் வாடும் அமுதசுரபி ஊழியர்கள், சம்பளமில்லாமல் வாடும் ஓய்வூதியதாரர்கள், நிரந்தர சம்பளமில்லாமள் வாடும் 1311 பொதுபணித்துறை வவுச்சர் ஊழியர்கள், சம்பளமில்லாமல் வாடும் ஸ்பின்னிங் மில் ஊழியர்கள் (SPINCO), காரைக்கால் ஜெயப்ரகாஷ் நாராயணன் நூற்பு ஆலை ஊழியர்கள், சம்பளமில்லாமல் வாடும் ரேஷன்கடை ஊழியர்கள் இவர்களின் நலனுக்கு இதுபோன்று எப்போதாவது ஒருமுறையாவது அனைத்து கட்சியையும் கூட்டி நடவடிக்கை எடுத்தது உண்டா?
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்களே!
புதுச்சேரியில் உள்ள விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கிய பாசிக் நிறுவனம் உரிய காலங்களில் விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்துகள், உயிர் உரம், விவசாயத்திற்கு அத்தியவசியமான வேளாண் பொருட்களை மானிய விலையில் மற்றும் தோட்டக்கலைக்கு தேவையான பொருட்களை மானிய விலையில் வழங்கி பாசிக் துவக்க காலம் முதற் கொண்டு சிறப்பான முறையில் விவசாயிகளுக்கு சேவை செய்து வந்தார்கள். ஆனால், தற்போது அதிகார போட்டியில் யார் பெரியவர் என்ற தலைக்கணத்தால் இன்று விவசாயத்துறை சார்ந்துள்ள பாசிக் ஊழியர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டது தங்களுக்கு தெரியாதா?
இதனால், பாசிக் நிறுவனத்தை நம்பி இருந்த புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத் இழந்து தவிப்பது தங்களது பார்வைக்கு வரவில்லையா?
இதே போன்று, புதுச்சேரியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான சேவைகள் செய்து வந்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் போடாத காரணத்தினால் இன்று அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் பொருட்களை வழங்கிய முதியோர் இல்லம், பள்ளிக் கல்வி துறை, மருத்துவமனை, பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்தையும் மூடு விழா நடத்தி விட்டு அதில் பணிபுரிந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் இன்று பாதிக்கப்பட்டு இருப்பது தங்களது மேலான பார்வைக்கு வரவில்லையா?
பாப்ஸ்கோ நிறுவனத்தை முடியதால், ஜிப்மர், அரசு மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லு£ரி இவைகளுக்கு அரிசி, காய்கறி, முட்டை, மளிகை பொருட்கள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு காய்கறி, மளிகை பொருட்கள், முட்டை போன்ற பொருட்களை சப்ளை செய்வது நிறுத்தப்பட்டு தற்போது தனியார் மயமாகி விட்டது தங்களது மேலான பார்வைக்கு வரவில்லையா?
இவர்களின் அனைவரின் நலனுக்கு ஒருமுறை இது போன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி புதுச்சேரி மாநிலம் முழுவதும் போராட்டம் செய்திருந்தால் அதை நாங்கள் வரவேற்றிருப்போம்.
ஆனால் ஊழியர்கள் அனைவரின் வீட்டின் அடுப்பிலும் பூனை தூங்குகிறது. இதைப் பற்றி யெல்லம் சிறிதும் கவலைபடாத முதல்வர் நாராயணசாமி அவர்களே! இது நியாயமா? என்பதை உங்கள் உள் மனதில் கைவைத்து தொட்டுப்பார்த்து சொல்லுங்கள்
உங்கள் செயல்படாத ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் ஊழியர்கள் தொழிலாளர்கள் சொல்ல முடியாத வேதனையில் சிக்கித் தவிக்கின்றனர்
உங்கள் குறைகளை மறைப்பதற்கு ஆட்சியில் இருந்துகொண்டே அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சி போல போராட்டம் அறிவித்து இன்னும் எத்தனை நாட்களுக்கு புதுச்சேரி மக்களை ஏமாற்றுவீர்கள்? ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு நீங்கள் போராட்டம் செய்யாதீர்கள்?
உங்கள் கட்சியை போராட்டம் செய்ய சொல்லுங்கள்! அதை விடுத்து ஆட்சியில் உள்ளவர்களே போராட்டம் அறிவிப்பது விந்தையிலும் விந்தை !
உங்களுக்கு கட்சி என்று ஒன்று புதுச்சேரியில் இருக்கிறது, அதற்கு தலைவர் என்று ஒருவர் இருக்கிறார்கள், நிர்வாகிகள் என்று இருக்கிறார்கள் அவர்களை போராட்டம் செய்ய சொல்லுங்கள் அதைவிடுத்து ஒரு மாநில முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி தலைவரைபோல் செயல்படாதீர்கள்
உங்கள் ஆட்சியில் நிறைய பிரச்சினைகள் உள்ளது முதலமைச்சர் என்ற முறையில் அதை கவனித்து சரி செய்து விட்டு மற்ற போராட்டங்களைப் பற்றி பேசுங்கள்
அனத்து கட்சி கூட்டத்தை உங்கள் கட்சி தலைமையை உங்கள் கட்சி நிர்வாகிகளை கூட்டி நடத்த சொல்லுங்கள் கட்சி தலைவரும் நீங்களே முதலமைச்சரும் நீங்களே என்பதுபோல் புதுச்சேரி மக்களை குழப்பாதீர்கள்
இதுவரை நீங்கள் ஆட்சிக்கு வந்து நிங்கள் சொன்ன ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற வில்லை மக்கள் உங்கள் ஆட்சியில் சித்தர வதையை அனுபவிக்கிறார்கள் இதற்கு புதுச்சேரி மக்களுக்கு முதலில் பதில் சொல்லி விட்டு மற்ற போராட்டங்களை நடத்துங்கள்
மக்களின், ஊழியர்களின் வயிற்றுப் பசிக்கு வழி சொல்லி விட்டு உங்கள் அரசியல் ஆராய போராட்டங்களை நடத்துங்கள் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதுவையில் லாக் டவுன் தமிழகத்தைப் போல… சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை தடுக்க வரி வருவாயை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டும் என்று சம்பத் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 போலீசார் தேர்வு…. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி காவல் துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்...

மிகப்பெரிய போராட்டம் – இளைஞர் விழாவை எதிர்த்து…

புதுச்சேரி நடைபெற உள்ள இளைஞர் விழாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி...

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும்டாக்டர்.அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல அமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் பெண்களுக்கான...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....