Home மாநிலங்கள் புதுச்சேரி எப்போதுமே விவசாயிகள் போராட்டமே - மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால்- வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் எம்.பி.வெங்கடேசன்...

எப்போதுமே விவசாயிகள் போராட்டமே – மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால்- வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் எம்.பி.வெங்கடேசன் கண்டனம்..

- Advertisement -

புதுச்சேரி திருபுவனை தொகுதி (மேற்கு) வட்டார காங்கிரஸ் பொறுப்பாளரும், இந்திய அரசு இராசாயனம் (ம) உரங்கள் துறை ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.பி.வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

பாஜக ஆட்சி எப்பொழுதெல்லாம் மத்தியில் ஆட்சி அமைக்கிறதோ அப்போதெல்லாம் விவசாயிகள் போராட்டம் தலை விரித்தாடும். மோடி சென்ற முறை வாய் ஜால வார்த்தைகளைக் கூறி அப்பொழுது கிடப்பில் போட்டுவிட்டார். ஆனால் இப்பொழுது விவசாயிகள் 1 கோடியே 47 லட்சம் பேர் திரண்டு வந்து டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதுவரை மோடி அரசு இவர்களை அழைத்து பேசவில்லை. இந்தப் போராட்டம் 25 நாட்களை கடந்து விட்ட நிலையில் இவர்களை மோடி கண்டு கொள்ளவே இல்லை. எதிர்க் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தும், மோடி அசைந்து கொடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் மோடி ஆட்சியே கலகலத்து விடும். காரணம் இந்தியத் திருநாடு விவசாயத்தை நம்பி உள்ள நாடு.

- Advertisement -

இந்த விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய அரசு அலட்சியம் காட்டும் செயலில் பிஜேபி கூட்டணியை ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகள், கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். ஆனால், கூட்டணி கட்சிகள் வெளியே சென்றாலும் மோடி அதைப் பற்றி கவலைப்படும் நிலையில் இல்லை. விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி மாண்டு போனாலும் அவருக்கு கவலை இல்லை. இந்தியாவை ஆண்ட முகலாய மன்னன் ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமையை விட பாஜக ஆட்சி படுமோசமான மக்கள் விரோத சக்தியாக மாறிவிடும்.

இந்த நிலை நீடிக்குமானால் மோடி ஆட்சியே கலகலத்துப் போகும். இந்த நிலையை மாற்றி இரண்டாம் கட்ட தலைவர்களின் ஒருவரை பாஜக ஒருவரை பிரதமராக இயக்கும் நிலையும் வரலாம். மோடி பிடிவாதமாக இருப்பதற்கு காரணம் அம்பானி, அதாணி பிடியில் சிக்கிக் கொண்டுள்ளார். இவர் அவர்களை விட்டு வெளியே வருவது மிகவும் கடினமான செயல். முகலாயப் பேரரசு எப்படி இந்தியாவில் மக்களால் தூக்கி எறியப்பட்டதோ. அதே நிலை இன்று பாஜகக்கு ஏற்பட்டுள்ளது.

ஔரங்கசீப் ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகளை சொல்லித்தான் முதலில் ஜனசங்கம் இது உருமாறி பாஜக என உருவெடுத்தது. மோடியை அறிமுகப் படுத்திய லால் கிஷன் அத்வானி. மோடி இவரை அரசியலில் இருந்து ஓரம் கட்டிவிட்டார். இவரால் ஒதுக்கி விடப்பட்ட முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் மோடியின் ஆட்சியை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இவர்கள் சமயம் பார்த்து போர்க்கொடி தூக்கும் நிலை விரைவில் வரும்.அப்போது மோடியின் சுயரூபம் வெளியே வரும். முகலாயப் பேரரசு ஔரங்கசீப் காலத்தில் எப்படி அழிவு நிலைக்கு போனதோ அதே நிலை பாஜக கட்சிக்கு மோடியால் வரும்.

அப்போது மோடியை மக்கள் தூக்கி எறிவார்கள் இதற்கு மேலும் இந்தியர்கள் கோஷம் எடுபடாது. நாட்டை துண்டு துண்டாக கூறு போட இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் வட மாநில மக்கள் முகலாய ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்தாலும். மக்கள் அதை மறக்காமல் பாஜகயினர் கூறும் பொய் வார்த்தைகளை நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். ஆனால் பாஜக ஆட்சியை விட மன்னர் ஔரங்கசீப் ஆட்சி மேலானது எனமக்கள் நினைக்கும் நிலைக்கு வந்து விட்டனர். எப்பொழுது விவசாயிகளின் போராட்டத்தை மோடி கண்டும் காணாமல் இருக்கிறாரோ, அப்பொழுதே அவர் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் வேலை துவங்கிவிட்டது. மோடி அவர்கள் அம்பானி அதானி விரித்த வலையில் விழுந்துவிட்டார். அந்த வலையில் இருந்து மீண்டு வருவது முடியாத காரியம். காங்கிரஸ் கட்சியை வடமாநில மக்களுக்கு எதிரான கட்சி என பறை சாற்றி வந்த பாஜகயினர் வார்த்தையை மக்கள் இனிமேலும் ஏற்க தயாரில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் பிஜேபி உட்கட்சியின் பூசல்களால் அமித்ஷாவை பிரதமராக்க முடிவு செய்யலாம்.

அப்படி வரும் பட்சத்தில் மோடி இவர் பங்குக்கு அம்பானி அதானி இவர்களை விட்டு பணபலத்தால் இதை முறியடித்து சீனியர் தலைவர்களை ஓரம்கட்டும் நிலை வரலாம். பாஜகவின் இந்த குழப்பமான சூழ்நிலையை மக்கள் சாதகமாக பயன்படுத்தி பாஜககட்சியை அடியோடு துடைத்து எறிவார்கள். எப்படி முகலாயப் பேரரசு ஔரங்கசீப் காலத்தோடு முடிவு பெற்றதோ. அதே நிலை பிஜேபி ஆட்சி மோடியின் ஆட்சியோடு நிறைவுபெறும் 2024 காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சியோடு பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறும். இதில் முக்கிய பங்கு நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் காங்கிரஸ் கட்சிக்கு துணையாக நின்று வெற்றிபெற வைப்பார்கள். ராகுல் காந்தி பிரதமராக ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை முழுவதுமாக ஏற்று விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுவார். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. விவசாயிகளின் கண்ணீர் பாஜக ஆட்சியை காவு வாங்கிவிடும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....