Home மாநிலங்கள் புதுச்சேரி பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது…அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தின் தேரின் பாகங்கள்

பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது…அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தின் தேரின் பாகங்கள்

- Advertisement -

அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் திருக்கோயில்கள் பாதுகாப்பு கமிட்டி செயலாளர் தட்சிணாமூர்த்தி கொடுத்துள்ள செய்தியில்,

அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் தங்கத் தேரின் பாகங்கள் மாயம் என வெளியிடப்பட்ட செய்திக்கு மறுப்பு செய்தி ஆலய நிர்வாகம் சார்பில் வெளியிடப்படுகின்றது.

- Advertisement -

கடந்த 28-04-1969 ஆம் ஆண்டு புதுச்சேரி, வெள்ளாழ வீதியில் உள்ள நாடு ஷண்முக வேலாயுத முதலியார் குடும்பத்தினருக்கு சொந்தமானதும், திவான கந்தப்ப முதலியார் மற்றும் திவான் சபாபதி கந்தப்ப முதலியார் இவர்கள் பொறுப்பில் இருந்து வந்ததுமான மரத்தினால் செய்த தங்க ரேக் பூசிய தேர் ஒன்றினை மேற்படி குடும்பத்தினர் அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜோசப் மரியதாஸ் முன்னிலையில் அன்பளிப்பாக ஒப்புக் கொடுத்தார்கள்.

மேலும் பிரதி வருடம் கார்த்திகை மாத தீபத்தன்று அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தான செலவில் அருள்மிகு மணக்குள விநாயகர் வீதியுலா நாடு ஷண்முக வேலாயுத முதலியார் வீதி மற்றும் ரங்கப்பிள்ளை வீதி வழியாக அருள்மிகு மணக்குள விநாயகர் மேற்படி தங்க ரேக் பூசப்பட்ட தேரில் வீதி உலா வருவது எனவும் கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்படி தேரின் மரவண்டிஎ (சகடை) வீதி உலா வருவதற்கு மிகவும் சிரமமாக இருந்த காரணத்தினால் புதிய டயர்கள் மாற்றி உபயோகப்பட்டு வந்தது. இருப்பினும் இது சரிவராததால் மேற்கூறிய மரத்தினால் ஆன சகடைக்கு பதிலாக வேறுறொரு சகடை ரப்பர் சக்கரத்தோடு புதியதாக ரூ. 34,500க்கு செய்து இன்றைய தேதிவரை உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், பழைய தங்க ரேக் பூசப்பட்ட தேரின் மேற்பகுதி தற்போதும் பயன்பாட்டில் உள்ளது என்றும் அது தேவஸ்தானம் அருகே உள்ள வாகனக்கூடத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் புதுச்சேரி சுப்பையா சாலையில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஒரு சகடை தேவைப்படுவதாக ஆலய நிறுவனர் கௌஸ் அவர்களால் கடந்த 10-04-2012ஆம் ஆண்டு தேதியிட்ட கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டதற்கு இணங்க மிகவும் கீலகமடைந்த உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்த சகடையை, அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தின் அறங்காவல் குழு தீர்மானத்தின்படி 26-4-2012ஆம் ஆண்டு தேதியிட்ட புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை ஆணையரின் ஒப்புதலோடு அருள்மிகு கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அக்கோவில் நிர்வாகத்தினர் சகடையின் மற்ற அம்சங்கள் உடைந்த பாகங்களை அவர்கள் செலவிலேயே சீர் செய்து வைத்துள்ளார்கள்.

மேலும், கோவிலில் உள்ள தங்க முலாம் தேர் தொடர்ந்து மக்கள் வழிபாட்டில் உள்ளது என்றும் அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தின் தேரின் பாகங்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்றும் இந்த தேவஸ்தான நிர்வாகம் பதிவு செய்கிறது.

மேலும், மேற்கூறிய தங்க ரேக் பூசிய தேரானது கடந்த 02-12-2020ஆம் ஆண்டு கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திரம் அன்று சிறப்பான முறையில் சுவாமி வீதி உலா சென்று வந்ததுள்ளது.

மேலும் தட்சணாமூர்த்தியின் மேலோட்டமான செய்திகளைக் கொண்டு கோவில் நிர்வாகத்தினர் மீது உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார்கள் என்றும், அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தான நிர்வாகம் தங்கள் விளக்கத்தினை பதிவு செய்துள்ளது என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....