Home மாநிலங்கள் தமிழ்நாடு 4ம் ஆண்டு நினைவு நாள்....

4ம் ஆண்டு நினைவு நாள்….

- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் சார்பில் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள கழக தலைமை கழகத்தில் கிழக்கு மாநில செயலாளரும், சட்டமன்ற அதிமுக கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில் மாநில எம்ஜிஆர் அணி செயலாளர் பாஸ்கர் எம்.எல்.ஏ., கழக சட்டமன்ற கட்சி கொறடா வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு அம்மா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தலைமை கழகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரைச்சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், சட்டமன்ற அதிமுக கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என தனது இறுதி மூச்சு உள்ளவரை தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழர்களின் நலனிற்காகவே வாழ்ந்து மறைந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மனம் உருகி கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர். சாதாரண இந்த நிகழ்ச்சியை திசை திருப்பும், நோக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது கேவலமான எண்ணத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று போராட்டம் நடத்துகின்றார். ஸ்டாலினின் இந்த நாடகம் தமிழ் மக்களிடம் எடுபடாது, அவரின் தீய எண்ணம் நிறைவேறாது. இதுபோன்ற செயல்களால் மாண்புமிகு அம்மாவின் மீது மக்கள் வைத்துள்ள பாசத்தை திசை திருப்பி விட முடியாது. மாண்புமிகு அம்மாவின் சாதனைகளையோ, அவரின் புகழையோ, அவரது பெயரையோ மறைத்துவிடவும் முடியாது. இதுபோன்ற செயல் நல்ல அரசியல் தலைவருக்கு சரியானதும் இல்லை.

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாண்புமிகு அம்மாவின் ஆட்சி அமைய இருப்பது உறுதி. அதுபோல் புதுச்சேரியிலும் அம்மாவின் புனித ஆட்சி அமைக்க கழகத்தினர் அனைவரும் இந்நாளில் சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாராமன், மாநில கழக துணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், பிஎல் கணேசன், பன்னீர்செல்வி, உழவர்கரை நகர கழக செயலாளர் அன்பானந்தம், மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, தொகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், ஜானிபாய், கருணாநிதி, ரவி, ராஜாமணி, வெங்கடேசன், மூர்த்தி, மணவாளன், எம்ஜிஆர் மன்ற தலைவர் நடேசன், துணை செயலாளர்கள் கணேசன், அப்பாவு, அம்மா பேரவை இணைச் செயலாளர் கருணாநிதி, துணை செயலாளர்கள் சித்தானந்தம், சார்லஸ், பொருளாளர் ஜெயசேரன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் மருது, மாணவர் அணி துணை செயலாளர் சீனுவாச பெருமாள், அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் பரசுராமன், மீனவரணி துணைச் செயலாளர் ராஜேந்திரன்,பொது குழு உறுப்பினர்கள் வீரம்மாள், செந்தில்முருகன், வீரக்கண்ணு, ரேணுகாதேவி ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் சாம்பவதி, கமலா, தொகுதி கழக தலைவர்கள் சவுரிநாதன், காந்தி, ஆறுமுகம், விக்ரமராஜா, கனகலிங்கம், நடராஜன் மற்றும் மணவெளி குமுதம்,நோணாங்குப்பம் பாஸ்கர், திருபுவனை காந்தி , பி.ரவி, சக்திவேல், செங்கேணி, ஐயப்பன், ராமச்சந்திரன், சுந்தராசு, கிருஷ்ணமூர்த்தி, .அலெக்ஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

18 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

பார்வையற்றவர்களுக்கு உணவு – பெனேவோலண்ட் அமைப்பு வழங்கியது.

புதுவையில் போகி தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டதது. புதுச்சேரியில் பெரிய மருத்துவமனை அருகில் 100 பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு மதிய...

இலாஸ்பேட்டையில் பொங்கல் பரிசு -முன்னாள் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

இலாஸ்பேட்டை தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்ட பெத்துச் செட்டிப் பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ...

முப்பெரும் விழா – பிஎம்எல் சார்பில் காலாப்பட்டு தொகுதியில்

புதுவை காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் அருள்மிகு கருமுத்துமாரியம்மன் கோவிலில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான கல்யாணசுந்தரம் அவர்களின் பி.எம்‌.எல் கல்யாணசுந்தரம் அறக்கட்டளை சார்பில் தொகுதி மக்களுக்கு...

மாத்தூர் மக்களுக்கு மதிய உணவு – பெனேவோலண்ட் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது..

தற்போது பெய்து வரும் கடும் மழையையொட்டி புதுச்சேரி அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாத்தூரில் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்த பெனேவோலண்ட் அமைப்பின் தலைவர் முனைவர் விஜயகுமார் மழையால் பாதிக்கப்பட்ட...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....