கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் நகரப்பாடி கிராமத்தில் உள்ள செம்பேரி தூர் வாரப்படாத நிலையில், ஒரு நாள் பெய்த மழைக்கே ஏரியின் கொள்ளவு நிரம்பி வயல்வெளிகள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படும் தரைப்பாலம் ஆகியவற்றில் நீர் நிரம்பி செல்கின்றன.
இதனால் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்க்ள் இது குறித்து பொது மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் ஏரியை தூர் வராததால், மழை நீரை விவசாயத்திற்கு தேக்கி வைக்க முடியாமல் ஆறு மற்றும் கடலுக்கு செல்வதை பார்த்து விவசாயிகள் மிகுந்த வருத்தபடுகின்றார்கள்.
ஸ்ரீமுஷ்ணம் நிருபர், ராஜா
இந்த மழையினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கும், நகரப்பாடி மற்றும் அதனை சுற்றி உள்ள 3000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த செம்பேரியை தூர் வாரி மராமத்து பணி செய்து தருமாறும் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கிறார்கள்….