புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் நாராயணசாமி மற்றும் பொருளாளார் விசிசி நாகராஜன் அவர்களும் பள்ளி கல்வித்துறை இயக்குநர், மற்றும் இணை இயக்குநர் ஆகியோர்களிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுவில்,
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வந்த நிலையிலும் புதுச்சேரியில் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது பாராட்டதக்கது.
ஆனால் தற்போது மழை காலமாக உள்ளதால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குளுனி பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் மாணவிகள் கட்டாயம் பள்ளி வளாகத்தில் வந்துதான் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர் .
அது மட்டுமின்றி யாரும் தேர்வு எழுதாமல் இருக்க சாக்கு போக்கு சொல்லக் கூடாது என்றும், யாருக்கும் தளர்வு கிடையாது என்றும், மாணவிகளின் வருகை பதிவேடு கட்டாயம் உண்டு என்றும், முழு பாடத்தின் அடிப்படையில் அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும், குளுனி பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.
ஆனால் புதுச்சேரி அரசு 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சந்தேகங்களை மட்டும் தீர்க்க காலை 10- மணி முதல் 1 -மணி வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பெற்றோர்கள் அனுமதி பெற்று சந்தேக வகுப்புகள் நடத்த வேண்டும் என்று புதுவை அரசு கூறியுள்ளது.
ஆனால், குளுனி பள்ளி அரசின் உத்தரவை மீறி மதியம் 1 மணி முதல் 4 மணி வரை தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ள குளுனி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.