Home மாநிலங்கள் புதுச்சேரி மாபெரும் போராட்டம் - ஹைடிசன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக....எம்பி வெங்கடேசன்..

மாபெரும் போராட்டம் – ஹைடிசன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக….எம்பி வெங்கடேசன்..

- Advertisement -

புதுவை மாநிலம், வில்லியனூர் ஒதியம்பட்டு நரிக்குறவர் பகுதியை ஒட்டியுள்ள ஹைடிசன் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது‌. இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் வேலை இல்லாத நிலையில் தற்போது மீண்டும் தொழிற்சாலை திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனிடையே இங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் கடந்த மூன்று வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்தும், இந்த வருட தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் மூன்று நாட்களாக தொழிற்சாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை தொழிலாளர்களிடம் நிர்வாகம் சார்பில் இப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காணப்படாத நிலையில் மேலும் இப்போராட்டத்தை தீவிரப்படுத்த பெண் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தொழிற்சாலையின் யூனியன் தலைவி கல்பனா கூறுகையில் இந்த தொழிற் சாலையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களை கம்பெனி நிர்வாகம் தரக்குறைவாக நடத்துவதாகவும், இந்த சமூகத்தை சேர்ந்த தங்களுக்கு உயரதிகாரிகள் பலர் உதவ மறுப்பதாகவும் அவர் வேதனையாக தெரிவித்தார்.

மேலும் தாங்கள் பெண்கள் என்பதால் தங்களின் போராட்டத்தை கம்பெனி நிர்வாகம் இழிவுபடுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். காவல்துறை மற்றும் துறை அதிகாரியிடம் தங்கள் நிலைமை பற்றி மனு வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கூறிய அவர் அரசே தங்களுக்கு உதவ வேண்டுமென பெண் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

மேலும் காங்கிரஸ் பிரமுகர் பிசிசி உறுப்பினர் எம்பி வெங்கடேசன் அவர்கள் கூறுகையில்,

ஹைடீசன் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும், தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஹைடிசன் நிர்வாகம் லட்சக் கணக்கில் இங்கே முதலீடு செய்து ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்ந்த முதலாளியே, தொழிலாளர்களின் மூன்று ஆண்டுகால சம்பள பிரச்சினை உடனே தீர வேண்டும் என்றும், தொகுதி அமைச்சருடன் மோதல் போக்கை கைவிடு, சமரசம் செய்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்க என்றும் தெரிவித்திருந்தார். இப்பிரச்சனை நீடிக்குமானால் ஹைடிசன் நிர்வாகமே ஸ்தம்பிக்கும் அளவில் பொது மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார் .மேலும் இப்போராட்டம் நீடித்தால் நிர்வாகம் கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....