Home இ-பேப்பர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ஒதுக்கீடு....

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ஒதுக்கீடு….

- Advertisement -

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு – இது வள்ளுவர் வாக்கு அந்த அடிப்படையில் நம் மாநில அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குதல் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஏழைஎளிய சமுதாயத்தை சேர்ந்த மக்களே ஆவர், பயிற்றுவிக்கும் முறைகளினாலும் பாடத்திட்டங்களினாலும் இந்த ஏழை எளிய மாணவர்கள் சி.பி.எஸ்சி தனியார் பள்ளி மாணவர்கள் போட்டிப் போட முடியவில்லை. மேலும் தனியார் பயிற்சி கட்டணம் செலுத்தி இவர்களால் தணி பயிற்சி பெறமுடியாது.
ஆகவே இதுபோன்ற பொருளாதாரத்தினாலும் சமூகத்தினாலும் ஒடுக்க பட்டமக்களை கண்டறிந்து, அவர்கள் முன்னேறும் வகையில் மருத்துவ படிப்பு நீட் நுழைவு தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி கேட்டு கொள்கிறது.
இதுகுறித்து இன்று புதுச்சேரி ஆளுனருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். நம் மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த சிறப்பு உள் ஒதுக்கீட்டை அனுமதித்து உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா…

புதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி கடலு£ர் ரோட்டில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி மாநிலத் தலைவர்...

ஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உட்பட அவரது ஆதரவாளர்கள் தங்களது பதிவியை...

100 ஆண்டான ஆலமரம்…

மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரங்களை கண்டெடுத்து அறம் சேவை மையம் சார்பில் அறம் நிஷா தலைமையில் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.

பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை…

புதுச்சேரியில் மிஷின் வீதியில் உள்ள சம்பா கோவில் அருகில் பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு பெனவோலன்ட் அமைப்பு சார்பில் பார்வையற்றவர்களுக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது....
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....