புதுச்சேரி கிருஷ்ணா நகரில் இயங்கி வந்த புதுவை பப்ளிக் பள்ளி இலாசுப்பேட்டை, மகாவீர் நகர், 4வது குறுக்குத் தெருவில் 5400 சதுரடியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பள்ளியின் தாளாளர் திருமதி. பூங்காவனம் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளர் வட்டம்-I திருமதி.மல்லிகாகோபால் வகுப்பறைகள் திறந்து வைத்து கொரோனா காலத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகள் குறித்து விளக்கி பேசினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், மங்கலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனுமோகன்தாஸ், எகோலான் கிளாஸ் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பள்ளயின் முதல்வர் முரளிதரன் கூறுகையில் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை பிரி கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை கட்டணம், புத்தகம், சீருடை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு முககவசம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.