Home மாநிலங்கள் புதுச்சேரி ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்...

ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்…

- Advertisement -

புதுச்சேரி, வில்லியனூர், கோர்க்காடு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கோர்க்காடு மெயின்ரோட்டில் விஜயகுமார் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது சில பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். விஜயகுமாருக்கு ஆன்லைன் விளையாட்டில் மோகம் அதிகம் என்பதால், கடையில் அமர்ந்திருக்கும்போது செல்போனில் விளையாடிக் கொண்டே இருந்துள்ளாராம். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோகம் அதிகரித்தை தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விஜயகுமார் விளையாடினாராம்.

துவக்க காலத்தில் ஆன்லைனில் ரம்பி விளையாடி சில ஆயிரங்களை விஜயகுமார் ஜெயித்துள்ளாராம். இதனால் ஆசை அதிகமாகி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோகம் அதிகரித்து நாள்தோறும் சீட்டு விளையாடினாராம். தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை இழந்த விஜயகுமார் பிறரிடம் கடன் வாங்கி சீட்டு விளையாடினாராம். இதனால் கடன் தொல்லையும் அதிகரித்தது. அதிகளவு பணத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்த விஜயகுமார் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லை கொடுக்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததாலும், விரக்தியடை விஜயகுமார் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளாராம். இதற்காக பெட்ரோலுடன் ஏரிக்கரைக்கு சென்ற விஜயகுமார் தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம் வைத்து சூதாடுவதை தடுத்து போலீசார் வழக்கு, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்தை அரசு தடுக்காமல் இருப்பது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

40 வாரங்களை கடந்து கபசுர குடிநீர் – ரவி அடிகளார்….

தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா என்ற கொடி நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீ நத்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அடிகளார் ரவி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்,...

வேட்பாளர்கள் சாலை மறியல் – தட்டாஞ்சாவடி தொகுதியில்…

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேது செல்வம், மக்கள்...

சிறந்த புதுச்சேரியை உருவாக்க அனைவரும் வாக்களியுங்கள் – பாஜக

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இணைந்த அளித்து...

போலித்தனமான வாக்குறுதிகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் – வைத்தியநாதன பேச்சு..

சட்டமன்றத் தேர்தலுக்காக இலாசுப்பேட்டை தொகுதியில் வேட்பு மனு தாக்குதலை முடித்த உடனே கூட்டணி கட்சிகளான, தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.வா.க.,...
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....