Home மாநிலங்கள் புதுச்சேரி 49ம் ஆண்டு தொடக்க விழா

49ம் ஆண்டு தொடக்க விழா

- Advertisement -

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆணைப்படி அஇஅதிமுக 49ம் ஆண்டு தொடக்க விழா புதுச்சேரி உப்பளம் அஇஅதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.
இதில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர் எம்எல்ஏ தலைமையில், முன்னாள் மாநில கழக செயலாளர் நடராஜன் முன்னாள் எம்எல்ஏ., கோகுலகிருஷ்ணன் எம்.பி., ஆகியோர் முன்னிலையில் கழகக் கொடியேற்றி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

மேலும் ஏழை மகளிருக்கு தையல் எந்திரம், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தட்டுவண்டி மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு புடவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கழகத்தினர் தலைமைக்கழகத்தில் இருந்து புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.

- Advertisement -

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாராமன், மாநில கழக துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்துவான் சூசை, உழவர் நகர கழக செயலாளர் அன்பானந்தம், தொகுதிக் கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், பொன்னுசாமி, கலியபெருமாள், ராஜாமணி,மூர்த்தி, ஜானிபாய், பால்ராஜ், ரவி, கருணாநிதி, வெங்கடேசன், மணி, சக்கரவர்த்தி, மணவாளன், முன்னாள் தொகுதி செயலாளர் அன்பழக உடையார், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் மோகன்தாஸ், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் கணேசன், அப்பாவு, அம்மா பேரவை துணை செயலாளர்கள் சார்லஸ், சித்தானந்தன், தொகுதி கழக அவைத்தலைவர்கள் சவுரிநாதன், ஆறுமுகம், கமல்தாஸ், திருபுவனை காந்தி, நோணாங்குப்பம் பாஸ்கர் மற்றும் ஜெய. சேரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா…

புதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி கடலு£ர் ரோட்டில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி மாநிலத் தலைவர்...

ஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உட்பட அவரது ஆதரவாளர்கள் தங்களது பதிவியை...

100 ஆண்டான ஆலமரம்…

மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரங்களை கண்டெடுத்து அறம் சேவை மையம் சார்பில் அறம் நிஷா தலைமையில் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.

பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை…

புதுச்சேரியில் மிஷின் வீதியில் உள்ள சம்பா கோவில் அருகில் பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு பெனவோலன்ட் அமைப்பு சார்பில் பார்வையற்றவர்களுக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது....
Join Whatsapp Group
Join Whatsapp Group Click HERE.....