Home மாநிலங்கள் புதுச்சேரி புதுச்சேரி சினிமா தியேட்டர்களில் விலை குறைப்பு..

புதுச்சேரி சினிமா தியேட்டர்களில் விலை குறைப்பு..

- Advertisement -

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று நோய் பரவலையொட்டி சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் 6 மாதத்துக்குப் பிறகு மீண்டும் சில கட்டுப்பாடுகளோடு புதுச்சேரியில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன.

புதுவையில் மாநிலத்தில் அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 15ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபானக்கடைகள், மற்றும் பார்கள் கலால் விதிமுறைகள்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நீச்சல் குளம் அக்.15ம் தேதி முதல் திறக்கலாம் என்றும் சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் 15ம் தேதி முதல் திறக்கவும், பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி தியேட்டர்களையும் திறந்து கொள்ளலாம். இதேபோல இசை மற்றும் நடன குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமூக இடை வெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும். என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலையில் புதுச்சேரியில் அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது. பார்க்கிங் கட்டணம் கார்களுக்கு ரூ.50லிருந்து ரூ.30 ஆகவும், பைக்குகளுக்கு ரூ.20லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு…

கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு, கட்சி துவக்கத்தின் போது 100 அடி சாலையில் கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு, ரெட்டியார்பாளையம், பொன் நகருக்கு...

இடமாற்றம் – புதுவை பப்ளிக் பள்ளி….

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் இயங்கி வந்த புதுவை பப்ளிக் பள்ளி இலாசுப்பேட்டை, மகாவீர் நகர், 4வது குறுக்குத் தெருவில் 5400 சதுரடியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய...

ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்…

புதுச்சேரி, வில்லியனூர், கோர்க்காடு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கோர்க்காடு மெயின்ரோட்டில் விஜயகுமார் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது சில பொருட்களை...

49ம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆணைப்படி அஇஅதிமுக 49ம் ஆண்டு தொடக்க விழா...