புதுச்சேரி கான்பெட் அனைத்து ஊழியர்கள் போராட்டம் கதிர்காமம் பெட்ரோல் பங்க அருகில் நடைபெற்றது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் நிறுவனங்களை பிரிக்கக் கூடாது. இரண்டு நிறுவனங்களும் ஒன்றாகத்தான் இயங்க வேண்டும்.
காரைக்காலில் இருக்கும் இடத்தை வைத்து எங்களுக்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவினால் நாங்கள் புதுவை மற்றும் காரைக்கால் நிறுவனங்களை சிறப்பாக நல்ல முறையில் செயல் படுத்துவோம்.
ஒரு வருடமாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த ஈபிஎப் மற்றும் கிராஜுவிட்டியை நிர்வாகத்திடம் பணத்தை கட்டவில்லை.
கடந்த 2011ஆம் ஆண்டு வரை எங்களின் நிர்வாகம் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு நிர்வாகத்தின் புதிய இயக்குனராக வந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிட்டார்.
நல்ல லாபத்தில் இயங்கி வந்த கிருமாம்பாக்கம் பெட்ரோல் பங்கை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்த்து விட்டால் இதன் மூலம் அதிகாரிகள் கையூட்டு பெற்று விட்டார்கள்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கான்பெட் அனைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.