Home மற்றவை ஆன்மீகம் அங்காளியின் ஆணையும் பாவாடைராயனின் வரலாறும்...

அங்காளியின் ஆணையும் பாவாடைராயனின் வரலாறும்…

- Advertisement -

கல்விக்காடு என்ற தலத்தின் தலைவனாக இருந்தவன் பெத்தாண்டவன் . பல இடங்களுக்கும் சென்று கொள்ளை அடித்து, குடிகளைச் சாய்த்து, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை, தமது குடிமக்களுக்கு வழங்கி ஆட்சி புரிந்து வந்தான். எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்த பெத்தாண்டவனுக்கு, தமது குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.
ஆகவே, அவனும் அவனது மனைவி பெத்தாண்டச்சியும் , தங்களுக்குக் குழந்தை வேண்டி தினமும் சிவனைப் வணங்கி வந்தனர். அப்போது ஒரு நாள், பரதேசி கோலத்தில் திரிந்து கொண்டிருந்த சிவன், அவர்கள் வீட்டு வாசலில் நின்று பிச்சை வேண்டினார். வந்திருப்பவர் சிவன் என்று பெத்தாண்டச்சிக்கு தெரியவில்லை. ஆனாலும் பரதேசி வடிவத்தில் இருந்த சாமியார் முகத்தில் இருந்த சிவ களையைக் கண்டாள். உடனே தங்கள் குலம் தழைக்கக் குழந்தைப் பேறு வேண்டுமென அவரிடம் வேண்டினாள். அந்த வேண்டுதலுக்கு செவி சாய்த்து, விபூதியை வழங்கிய சிவன், அதை உண்டால் அவர்கள் குலம் தழைக்க ஒரு புத்திரன் பிறப்பான், அவனால் வம்சம் புகழ் அடையும், அவனும் உலகப்புகழ் பெற்றவனாக விளங்குவான் என்றும் ஆசீர்வதித்து சென்றார்.
சிவனின் வாக்குப்படி, சிறிது காலம் கழித்து பெத்தாண்டவன் – பெத்தாண்டச்சி தம்பதிக்கு அழகும், களையும் நிறைந்த ஆண் புத்திரன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு தங்கள் ஊரை காப்பவன் என்று பொருள்படும், ” கல்விகாத்தான் ” என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
அவனுடைய ஐந்தாவது வயதில், அவனுக்கு கல்வி, கலை, வீர விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் அளிக்கப்பட்டது. அவன், அவை அனைத்திலும் ஆர்வத்துடன் கற்று தேர்ந்தான். அவனுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன், தந்தை பெத்தாண்டவன் மக்களைக் காப்பதற்காக, குலத்தொழிலை ஏற்றுகொள்ளப் பணித்தான். ஆனால், கொள்ளை அடிப்பது, குடிகளை சாய்ப்பது, உயிர்களை கொல்வது போன்ற பழி நேரும் தொழில்களை செய்வதற்கு கல்விகாத்தானுக்கு மனமில்லை. தந்தையை எதிர்த்துப்பேச முடியாமலும், அவருடைய ஆத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும் அங்கிருந்து தப்பித்துக் கால் போனபோக்கில் ஓடினான்.
ஓடினவன் அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்தான். அமாவாசை இரவு என்பதால் சூழ்ந்திருந்த இருட்டாலும், காட்டு மிருகங்கள் எழுப்பிய சத்தத்தாலும் பயந்து தவித்த பொழுது, கண்ணை பறிக்கும் சோதி ஒன்றைக் கண்டான். கொள்ளிவாய் பிசாசாக இருக்குமோ என அவன் அஞ்சிய பொழுது ஒரு பெண் குரல், ”மகனே! அஞ்சாதே! நான் தான் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி ! உனக்கு நான் துணை புரிவேன்” என்றொலித்தது. மேலும் அக்குரல் இரவு முடிவதற்குள், தனக்கு (அங்காள பரமேசுவரி) ஒரு ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தவும் அவனைப் பணித்தது. அன்னையின் ஆசியுடன் அந்த வேண்டுதலை கல்விகாத்தான் நிறைவேற்றி எழுப்பிய ஆலயமே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயமாக விளங்குகிறது.
இதனால் உள்ளம் மகிழ்ந்த அன்னை அங்காளபரமேஸ்வரி, அவனிடம் மேலும் ஒரு சோதனை வைத்தாள். அதையும் ஏற்ற கல்விகாத்தான் தன்னுடைய குடலையும் உள்நாக்கையும் பிடுங்கி அன்னை தனது கரத்தால் தொட்டு வைத்த பாவாடையில் சமர்ப்பித்தான்.
அம்மன் அவனைத் தனது மகனாக ஏற்றுத் தூக்கி முத்தமிட, அவனுக்கு அம்மனின் ஆங்கார சக்தி உடல் முழுவதும் பரவி தெய்வ அம்சம் கிடைக்க பெற்றான். அம்மன் அவனுக்கு பாவாடைராயான் என்றும் பெயர் சூட்டினாள்.
அங்காளபரமேஸ்வரி தனது கோயில்களில் எல்லாம் பாவாடைராயனுக்கும் சன்னதி இருக்கும், பக்தர்கள் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு வழிபடுவார்கள், அவன் பாமர மக்கள் பலருக்குக் குலதெய்வமாக விளங்குவான் என்று பாவாடைராயனுக்கு வரம் அளித்தாள். மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் வெளியே அம்மனுக்கு எதிரே தமது மனைவியரான முத்துநாச்சியார் மற்றும் அரியநாச்சியாருடன் காவல் புரிகிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Advertisement

Most Popular

புதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு…

கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு, கட்சி துவக்கத்தின் போது 100 அடி சாலையில் கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு, ரெட்டியார்பாளையம், பொன் நகருக்கு...

இடமாற்றம் – புதுவை பப்ளிக் பள்ளி….

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் இயங்கி வந்த புதுவை பப்ளிக் பள்ளி இலாசுப்பேட்டை, மகாவீர் நகர், 4வது குறுக்குத் தெருவில் 5400 சதுரடியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய...

ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்…

புதுச்சேரி, வில்லியனூர், கோர்க்காடு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கோர்க்காடு மெயின்ரோட்டில் விஜயகுமார் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது சில பொருட்களை...

49ம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆணைப்படி அஇஅதிமுக 49ம் ஆண்டு தொடக்க விழா...