என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் NSJ ஜெயபால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்..
புதுச்சேரி அரசு வருகிற 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருக்கிறது பள்ளி கல்வியை பொருத்த வரை புதுச்சேரி தமிழக கல்வி ஆணையத்தையே பின் பற்றி வருகிறது
தற்போது கொரோனா தாக்கம் புதுச்சேரியை விட தமிழகத்தில் குறைவாகவே உள்ள போதிலும் அக்டோபர் மாதம் முழுவதும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது
புதுச்சேரியில் கொரோனா தொற்று கோர தாண்டவம் ஆடி வரும் இன்றைய சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது என்பது மாணவர்களின் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பாகும்
தமிழக அரசு 40% பாடத்திட்டங்கள் குறைப்பு என அறிவித்துள்ளது ஆனால் எந்த பகுதிகளில் குறைப்பது என்று இன்னும் முடிவு செய்து அறிவிக்கப்படவில்லை.
இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பிறகே சந்தேகம் எழும்பும்
இந்த நிலையில் பாடம் நடத்துதற்கு முன்பே மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என புதுச்சேரி அரசு சொல்வது முன்னுக்கு பின் முரணாக உள்ளது
புதுச்சேரி அரசு மத்திய அரசு வழிகாட்டுதலின் படியும் அண்டை மாநில முடிவை அறிந்தும் நடந்த கொள்ள வேண்டும்.
எனவே புதுச்சேரி அரசு பள்ளிகளை திறக்கும் முடிவை தள்ளி வைத்து மாணவர்கள் வாழ்வின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.