Home செய்திகள் புதுச்சேரி நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. தற்போது புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளது. 5ம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம். மாநில அரசுகள் விருப்பப்படி மும்மொழியை தேர்வு செய்யலாம். கல்வி, விளையாட்டு திறமையுடன் கூடிய மதிப்பெண் பட்டியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையான பாடத்திட்டம், கட்டாய தொழில்கல்வி போன்ற இந்தியாவின் எதிர்காலமான மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் பல நல்ல அறிவிப்புகள் புதிய தொழில் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய பாடத்திட்டம், பெண்கள் கல்வி பயில உறைவிட பள்ளி, அறிவை சோதிக்கும் வகையில் தேர்வுகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே கல்வி முறை, ஆசிரியர்களின் தரம் பரிசோதனை போன்ற அறிவிப்புகள் இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்லும். உயர்கல்வியில் விடுப்பு எடுத்து மாணவர்கள் படிப்பை தொடரும் திட்டம், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைப்பு போன்றவை மிகப்பெரும் சீர்திருத்தத்தை கொண்டுவரும் மாற்றங்கள். தேசிய நுழைவுத்தேர்வுக்கென தனி அமைப்பு, தேசிய ஆராய்ச்சி நிறுவனம், உயர்கல்வியில் அரசு மற்றும் தனியாருக்கு ஒரே விதிகள் போன்றவை சமுதாய வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். பாரம்பரிய கலைகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு அழிந்த கலைகளை உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த அறிவிப்புகள் அனைத்தும் நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் வெற்றிநடை போட வைக்கும். மத்திய அரசு அறிவித்துள்ள இந்த புதிய கல்வி கொள்கையை வெற்றி மக்கள் இயக்கம் சார்பில் மனதார வரவேற்கிறேன். இதனை கொண்டுவந்த பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டுக்கள். மத்திய அரசின் கல்வி கொள்கையை மாநில அரசுகள் அரசியல்பாகுபாடின்றி ஏற்று செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று வெற்றி மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வெற்றிச்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..