Home செய்திகள் புதுச்சேரி ஒரே நாடு... ஒரே கல்வி முறை...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர் நிறை… எல்லோரும் ஓர்விலை..
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனம் இன்று மெய்பட்டிருக்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகள் களையப் படுகின்றன. தாய்மொழிக் கல்வியின் அவசியம் உறுதிப் படுத்தப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் ஆர்வம் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாடத்திட்டமும் தேர்வு திட்டமும் எளிமைப் படுத்தப் பட்டிருக்கிறது. நம் நாட்டிற்கு ஏற்ற வகையில் நமது கல்வி கொள்கை புதிய பரிமாணங்களுடன் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேய ஆட்சி நடைபெற்றபோது மெக்காலே பிரபு கொண்டு வந்த கல்விமுறையில் எந்த மாற்றமும் இல்லாது மிகச் சில திருத்தங்களுடன் நம் இந்திய நாட்டின் கல்விக் கொள்கை இருந்து வந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்தியாவின் கல்விக் கொள்கை நமது நாட்டிற்கும் மக்களுக்கும் சிறப்பாக பயனளிக்கும் வகையில் நம் மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம், எதிர்கால வளர்ச்சி, மாணவர்களின் திறன், ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிதாக வகுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆட்சிக் காலத்திலேயே, புதிய கல்விக் கொள்கையை பற்றிய ஒரு ஆய்வறிக்கையை தயாரிப்பதற்காக, முன்னாள் அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான ஒரு கல்விக் குழுவை அமைத்திருந்தார். கடந்தாண்டு இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மீண்டும் ஒரு புதிய கல்விக் குழுவை நியமித்து அவர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டது. இவ்விரண்டு குழுக்களின் ஆலோசனை களையும் ஒருங்கிணைத்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது அது பொதுவெளியில் பகிரப்பட்டது.

கல்வியாளர்கள் அறிஞர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என்று கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டுப் பெறப்பட்டன. இதன்பிறகு இந்திய நாட்டின் புதிய கல்விக் கொள்கை மத்திய அரசால் சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தற்போது மத்திய கல்வி அமைச்சகம் ஆக மாற்றப்படுகிறது.
ஏழை மக்களின் ஒட்டுமொத்த நீண்ட நா;றீயீs கல்வி கனவை புதிய கல்வி கொள்ளை நினைவாக்கி உள்ளது. மாற்றங்களுக்குவித்திடும் மத்திய கல்வி கொள்கை 2020 பத்தாம் வகுப்பிற்கு பிறகு இதுவரை கடைபிடிக்கப்பட்ட பிளஸ் 1, பிளஸ் 2, 10 + 2 போர்டு அமைப்பு முற்றிலுமாக கைவிடப்படுகிறது. இதற்கு பதிலாக புதிய கல்வி கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது இதன்படி இனி வரும் புதிய அமைப்பில் 5 + 3 + 3 + 4 ஆக இருக்கும்.

கட்டாய தாய்மொழி கல்வியுடன் தொடக்கப்பள்ளி 5 ஐந்தாம் வகுப்பு வரையும் தனக்கு விருப்பமான ஒரு மொழியை தேர்வு செய்யும் உரிமை உடன் 6 முதல் 8 வரை நடுநிலைப்பள்ளியும், தனக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்துகொள்ளும் உரிமையுடன் 8 முதல் 11ஆம் வகுப்புவரை உயர்நிலைப் பள்ளியும் பள்ளிக்கல்வி முறையாக அங்கீகரிக்கப்படும்.
இனி 12ஆம் வகுப்பு முறை இருக்காது. அதற்கு பதிலாக பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே ஆறாம் வகுப்பிலிருந்தே தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

புதிதாக அமைக்கப்படும் அனைத்து பட்டப்படிப்பு முறையிலும் பாடத்திட்டங்கள் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள உரிமை அளிக்கப்படும். அறிவியலை முதன்மையாக கற்கும் மாணவர் இசையையோ ஓவியத்தையும் விருப்பப்பாடமாக சேர்த்து படிக்கலாம். எந்த பட்டப்படிப்பும் அந்த மாணவரின் விருப்ப பாட கலவையாக அமைத்துக்கொள்ள முடியும்.
நேற்றைய அறிவிப்பினால் உருவாக்கப் பட்டிருக்கும் இந்திய உயர் கல்வி கவுன்சில், இனி இந்திய நாட்டின்அனைத்து உயர் கல்வியையும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். கல்லூரிகளுக்கு அதிகாரம் வழங்கும் யுஜிசி ஏஐசிடிஇ அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்படும்.

எந்தவொரு பட்டப்படிப்பு படிப்புக்கும் மாணவர் ஒரு வருடம் மட்டுமே பூர்த்திசெய்தால் அவருக்கு அடிப்படை சான்றிதழ் கிடைக்கும், அவர் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்தால் அவருக்கு டிப்ளோமா சான்றிதழ் கிடைக்கும், அவர் முழு படிப்பை முடித்தால் பட்டம் சான்றிதழ் கிடைக்கும். எனவே எந்தவொரு மாணவரின் வருடமும் இடையில் போக்கை முறித்துக் கொண்டால் வீணாகாது.
இந்திய நாடு முழுவதும் ஒரே சீராக அமைக்கப்படும் உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வும் (சட்டம் மற்றும் மருத்துவம் தவிர்த்து) இந்திய நாடு முழுமைக்கும் ஒரே முறையில் சீரமைக்கப்படும்.

இனிகோடிக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாடுகளில் தங்கி இனி புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி 100 புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு பாடநெறி ஊட்டமும் ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் மூடிமறைத்து ஒற்றை அதிகாரத்தால் நிர்வகிக்கப்படும்.

இப்போது நமது கல்வி முறை மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும் கல்வி சுமையையும் கொடுப்பதாக இருக்கிறது என்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் விதத்தில் நமது கல்வி திட்டம் அமைக்கப்படவில்லை என்றும் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையால் இந்நிலைகள் கண்டிப்பாக மாற்றி அமைக்கப்படும் மாணவர்கள் விருப்ப பாடங்களை மட்டும் தாய்மொழியில் படிப்பதால் இனி கல்வியை சுமையாக கருதாமல் சுவையாக கருதி படிப்பார்கள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது முழுமனதோடு வரவேற்கிறேன் நீண்டகாலமாக மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை லட்சக்கணக்கானோர் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வி நமது தேசத்தை ஒளி நிறைந்ததாகவும் வளம் மிகுந்ததாகவும் மாற்றட்டும் புதியன கற்றல் புதிய ஆராய்ச்சி புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த சகாப்தத்தில் புதிய கல்விக் கொள்கை இந்தியாவை அறிவு சார் மையமாக மாற்றம் என்று நமது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தன் பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று பாடுபடும் பெற்றோர்களுக்கு இந்த புதிய கல்விக் கொள்கை மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை மேலும் இந்த கல்விக் கொள்கையை நமக்கெல்லாம் வகுத்தளித்த டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் கமிட்டிக்கும்கஸ்தூரி ரங்கன் கமிட்டிக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவரின் அறிவார்ந்த அமைச்சர் குழுவினருக்கும் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவித்து மக்கள் ஆதரவுடன் மனப்பூர்வமாக வரவேற்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..