Home செய்திகள் புதுச்சேரி கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பிளாஸ்மா சிகிச்சை - A.S.R மக்கள் கட்சி கோரிக்கை...

கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பிளாஸ்மா சிகிச்சை – A.S.R மக்கள் கட்சி கோரிக்கை…

ASR மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஏஎஸ்ஆர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது புதுச்சேரி அரசுக்கு வைத்த வேண்டுகோளாவது

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை. அதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் விரைவில் குணமடைய முடியாத சூழல் உள்ளது. இது கொரொனா தொற்று அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. இதனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் கடும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஜிப்மரில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அங்கு தங்களை சேர்க்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது மாநில சுகாதாரத்துறைக்கு இழுக்கு என்பதால் விரைந்து மாநில அரசின் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு தேவையான தூய்மை மற்றும் சுகாதார பணிகளை செய்து தர வேண்டும்.

கொரோனா நோயாளிகளை குணமாக்குவதில் பிளாஸ்மா சிகிச்சை முக்கிய பங்காற்றி வருவதாக உலகளவில் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் புதுச்சேரியில் இன்று வரை பிளாஸ்மா சிகிச்சை என்பது ஆரம்பிக்கப்படவே இல்லை. பிளாஸ்மா சிகிச்சை என்பது துறை அமைச்சருக்கே தெரியாத நிலைதான் புதுச்சேரியில் உள்ளது.

நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் உப்பனாறு கழிவு நீர் வாய்க்கால் மீது மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அது பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். அதுபோல் பாதியிலேயே நீண்டகாலமாக நிறுத்தப்பட்டுள்ள அரும்பார்த்தபுரம் மேம் பாலப்பணி சமீபத்தில் மீண்டும் 98வது முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது அந்த மேம்பாலப்பணியை மீண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து செய்து முடித்து திறக்க வேண்டும். அதுபோல் புதுச்சேரி கடலூர் சாலையில் தமிழகப்பகுதிகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் புதுச்சேரி பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படாததால் அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகின்றது. எனவே உடனடியாக அச்சாலையை புதுச்சேரி பகுதிகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் இறுதிக்காலத்தில் அவசர அவசரமாக அப்போதைய தேர்தலை முன்னிட்டு பொதுப்பணித்துறையில் 1311 வவுச்சர் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால் அவர்கள் இன்று வரை பணிநிரந்தரம் செய்யப்படாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பல கட்ட போராட்டங்களை மனைவி, பிள்ளைகள் உள்ளிட்டோருடன் குடும்பத்துடன் நடத்தி வருகின்றனர். இது பார்ப்பதற்கே மிகவும் கொடுமையாகவும், வேதனையாகவும் உள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டாவது அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய அல்லது தினக்கூலி ஊழியர்களாக மாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் பொது செயலாளர் இந்திரன், துணை பொது செயலாளர் முருகன், துணை தலைவர்கள் இன்பசேகரன், கனிகண்ணன், மணிவேலு, டிஆர் சரண், பிஆர் ரெட்டியார், தலைமை அலுவலக செயலாளர் தாமஸ், ஓபிசி மாநில செயலாளர் தங்கராஜ், ஓபிசி அணி தலைவர் பாலு (எ) கர்ணன், மாநில ஊடக பிரிவு கதிரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..