Home செய்திகள் புதுச்சேரி N.R.காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன் மறைவு - வெற்றிச்செல்வன் ஆழ்ந்த இரங்கல்.....

N.R.காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன் மறைவு – வெற்றிச்செல்வன் ஆழ்ந்த இரங்கல்…..

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் (67) கொரோனா பாதிப்பால் இன்று காலை உயிரிழந்தார்.

முன்னாள் நியமன எம்எல்ஏ–வான பாலன் புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 23-ந் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பாலன் உயிரிழந்தார். அவருக்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், கிட்னி பாதிப்பு போன்றவை இருந்துள்ளது. இதனால்தான், பாலனால் கொரோனாவின் தாக்கத்திலிருந்து தப்ப முடியவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.

புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் முக்கிய அரசியல் பிரமுகர் பாலன் ஆவார். பாலன் இறப்பு என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான என். ரங்கசாமிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. காங்கிரஸில் இருந்து பிரிந்து ரங்கசாமி என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தது முதல், பொதுச்செயலாளராக அவருடனேயே பயணித்தது மட்டுமின்றி, சிக்கலான சமயங்களில் பாலன் உரிய ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார்.

கட்சிக்கு உள்ளேயோ, வெளியேயோ பாலன் மீது புகார்கள் வந்தாலும், ரங்கசாமி அவரை விட்டுக்கொடுத்ததே கிடையாது. எனவே அரசியல் களத்தில் ரங்கசாமி தனது வலது கரத்தை இழந்துவிட்டதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர். பாலன் கொரோனாவிற்கு மரணமடைந்திருப்பது கட்சி நிர்வாகிகளிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பாலன் மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெற்றி மக்கள் இயக்கத் தலைவர் வெற்றிச்செல்வன் அவர்களும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஏ எஃப் டி சேர்மன், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் , இந்நாள் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர், தேசியவாதி, தொழிற்சங்கத் தலைவர், சிறந்த பேச்சாளர் அன்புச் சகோதரர் தெய்வத்திரு. வெ. பாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் துயர் அடைந்தேன். சமீபத்தில் கூட கொரோனா தொற்றுக்கிருமி நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்து முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாக கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் நம்மை அன்புடன் அழைத்து , நமது சேவையின் தன்மையை வெகுவாகப் பாராட்டி, பொருளாதாரத்தில் கஷ்டமான சூழ்நிலையிலும் சேவை செய்து கொண்டு வருவதை அன்புடன் விசாரித்து ஊக்கமளித்தார். மனதில் பட்டதை வெளிப்படுத்துவதில் தயங்காத அஞ்சாநெஞ்சம் கொண்ட ஒரு அற்புத மனிதரை இழந்து, பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்திருக்கிற கட்சியின் தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், புதுச்சேரி மக்களுக்கும், ஏ எஃப் டி பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் எனது சார்பிலும், வெற்றி மக்கள் இயக்கத்தின் சார்பிலும், புதுச்சேரி மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சார்பிலும், நான் சார்ந்திருக்கின்ற முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி மக்கள் சார்பிலும் எனது குடும்பத்தாரின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி புகழ் அஞ்சலியும் மலர் அஞ்சலியும் செலுத்தி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே என். ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜெயபால் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து 4 நாட்கள் பங்கேற்றிருந்தார். இதையடுத்து புதுச்சேரி சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..